உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தில்லி ஐஐடியில் எம்.டெக் மாணவர் தற்கொலை!

தில்லி ஐஐடியில் 23 மாணவர் ஒருவர் தனது விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image
அரக்கோணம் அருகே மருத்துவக்கல்லூரி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை 
Updated On :16 பிப்ரவரி 2024, 7:31 am

DIN

வரத் சஞ்சய் நெர்கர்(23) என்ற மாணவர் எம்.டெக் இறுதியாண்டு பயின்று வந்தார். இவர் மகாராஷ்டிரத்தின் நாசிக்கைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.

மாணவர் தற்கொலை குறித்து ஐஐடி விடுதிக்கு எல்லைக்குள்பட்ட காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. இதையடுத்து காவல் நிலைய அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

சஞ்சயின் தொலைபேசியை அணுக முடியாததால், அவரது நண்பர் ஒருவர் ஐஐடி வளாகத்தின் பாதுகாப்பு ஊழியர்களுடன் சேர்ந்து கதவை உடைத்தபோது, மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சஞ்சய் காணப்பட்டார்.

தற்கொலைக்கான கடிதம் ஏதும் கண்டெடுக்கப்படவில்லை. வேறு சந்தேகத்திற்கு இடமான தடயங்களும் கிடைக்கவில்லை. இதையடுத்து அனைத்து கோணங்களிலும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.