காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதற்கு அக்கட்சியின் எம்பி ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2018-ஆம் ஆண்டு, வருமான வரிக் கணக்கை 45 நாள்கள் தாமதமாக தாக்கல் செய்ததற்காக வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் மக்களிடம் இருந்து தேர்தல் நன்கொடை பெறுவதற்காக சமீபத்தில் தொடங்கப்பட்ட இணையதளம் மூலம் பெறப்பட்ட தொகையும் அந்த வங்கிக் கணக்கில் உள்ளதாக அக்கட்சியின் பொருளாளர் அஜய் மக்கான் தெரிவித்துள்ளார்.
மேலும், காங்கிரஸின் இளைஞரணி, மகளிரணி உள்ளிட்ட வங்கிக் கணக்குகளை மீட்பதற்கு ரூ. 210 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தி வெளியிட்ட பதிவு:
பயப்பட வேண்டாம் மோடி. பணத்தால் உருவானது அல்ல காங்கிரஸ், மக்கள் பலத்தால் உருவானது. சர்வாதிகாரத்தின் முன் நாங்கள் ஒருபோதும் பணிந்ததில்லை, தலை வணங்கவும் மாட்டோம்.
இந்தியாவின் ஜனநாயகத்தை காக்க ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரும் நகமும், சதையுமாக போராடுவார்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கலவரத்தில் காங்கிரஸ் தொண்டர் பலி: மமதாவுக்கு ராகுல் கண்டனம்
எதிர்க்கட்சித் தலைவர்களைவிட வளர்ப்பு நாய்க்கு முக்கியத்துவம் கொடுக்கிறாரா ராகுல்?

மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்

தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்..?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


