மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 2 பேர் பலி, 25 பேர் காயம்

மணிப்பூர் மாநிலம், சுராசந்த்பூர் மாவட்டத்தில் மீண்டும் வன்முறை போராட்டங்கள் வெடித்ததையடுத்து அங்கு பதற்றம் நிலவுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சுராசந்த்பூரில் போராட்டக்காரர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வெளியே இருந்த பேருந்து மற்றும் பிற கட்டடங்களுக்கு தீ வைத்தனர்.
சுராசந்த்பூரில் போராட்டக்காரர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வெளியே இருந்த பேருந்து மற்றும் பிற கட்டடங்களுக்கு தீ வைத்தனர்.

இம்பால்: மணிப்பூர் மாநிலம், சுராசந்த்பூர் மாவட்டத்தில் மீண்டும் வன்முறை போராட்டங்கள் வெடித்ததையடுத்து அங்கு பதற்றம் நிலவுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மணிப்பூரில் ஆயுதம் தாங்கிய குழுவினருடன் குக்கி-நாகா சமூகத்தை சேர்ந்த தலைமைக் காவலர் சியாம் லால் இருப்பது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதையடுத்து தலைமைக் காவலர் சியாம் லால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைைக் கண்டித்து குக்கி-நாகா சமூகத்தை சேர்ந்தவர்கள் சுராசந்த்பூரில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது.

இதனிடையே ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வெளியே இருந்த பேருந்து மற்றும் பிற கட்டடங்களுக்கு தீ வைத்தனர். இதனால் பாதுகாப்புப் படையினர் போராட்டக்காரர்களை நோக்கி கண்ணீர் புகைக் குண்டு வீசினர், போராட்டக்காரர்களும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். போராட்டக்காரர்களின் தாக்குதல் மேலும் வலுவடைந்த நிலையில் பாதுகாப்புப் படையின் அவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 2 பேர் கொல்லப்பட்டனர், 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

சுராசந்த்பூரில் போராட்டக்காரர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வெளியே இருந்த பேருந்து மற்றும் பிற கட்டடங்களுக்கு தீ வைத்தனர்.
ஒடிஸாவில் உறுப்பு தானம் செய்பவரின் உடலுக்கு அரசு மரியாதை; குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம்!

இதனைத் தொடர்ந்து மாநிலத் தலைநகர் இம்பாலில் இருந்து 65 கிமீ தொலைவில் உள்ள சுராசந்த்பூர் மாவட்டத்தில் புதிய போராட்டங்கள் வெடித்ததையடுத்து அங்கு பதற்றம் நிலவுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது

சுராசந்த்பூரில் வன்முறையை கருத்தில் கொண்டு இணைய சேவை தடை செய்யப்பட்டுள்ளது.

பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரியிருந்தனர். இதற்கு குக்கி-நாகா சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் 2023 இல் இரு சமூகத்தினருக்கும் இடையே பெரும் கலவரம் மூண்டது. இதில் குக்கி-நாகா சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்தும் மாவட்டமான சுராசந்த்பூர் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com