நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆம் ஆத்மி வெற்றி!

ஆம் ஆத்மி மிகப்பெரிய சக்தியாக மாறும் என நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்தின் போது கேஜரிவால் தெரிவித்தார்.
தில்லி சட்டப் பேரவையில் முதல்வர் கேஜரிவால்
தில்லி சட்டப் பேரவையில் முதல்வர் கேஜரிவால்
Published on
Updated on
1 min read

தில்லி சட்டப் பேரவையில் கேஜரிவால் கொண்டுவந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது.

தில்லி சட்டப் பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. கேஜரிவால் கொண்டுவந்த நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு ஆதரவாக 54 எம்எல்ஏ.க்கள் வாக்களித்தனர்.

மொத்தம் உள்ள 70 எம்எல்ஏ.,க்களில் 54 பேர் ஆதரவாக வாக்களித்த நிலையில் ஆம் ஆத்மி அரசு வெற்றி பெற்றுள்ளது. பேரவையில் ஆம் ஆத்மிக்கு எதிராக எம்எல்ஏ ஒருவர் வாக்களித்துள்ளார்.

தில்லி சட்டப் பேரவையில் முதல்வர் கேஜரிவால்
தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு அரசு தடை!

இதுதொடர்பாக கேஜரிவால் கூறுகையில்,

இந்தாண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றாலும், 2029 தேர்தலில் பாஜக இல்லாத தேசத்தை ஆம் ஆத்மி நிச்சயம் உருவாக்கும்.

பாஜகவுக்கு ஆம் ஆத்மி கட்சி மிகப்பெரிய சவாலாக உள்ளது. அதனால்தான் பாஜக அனைத்து தரப்பிலிருந்தும் தாக்குதலுக்கு உள்ளாகிறது. நாங்கள் பெரிய சக்தியாக மாறுவோம் என நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்தின் போது கேஜரிவால் தெரிவித்தார்.

மேலும், பேரவையில் எங்களுக்குப் பெரும்பான்மை உள்ளது. ஆனால் கட்சி எம்எல்ஏக்களை வேட்டையாட பாஜக முயற்சிப்பதால் நம்பிக்கைத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

எந்த எம்எல்ஏவும் கட்சியிலிருந்து விலகவில்லை, இரண்டு எம்எல்ஏக்கள் சிறையிலும், சிலர் உடல்நலம் குறைவு காரணமாகவும், சிலர் வெளியூரிலும் உள்ளனர்.

தில்லி சட்டப் பேரவையில் முதல்வர் கேஜரிவால்
விருதுநகர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 10 பேர் பலி

பாஜக என்னை கைது செய்யலாம், ஆனால் கேஜரிவாலின் எண்ணங்களை உங்களால் நிறைவேற்ற முடியுமா? சேவைகள் துறை மற்றும் அதிகாரத்துவத்தின் மீதான கட்டுப்பாட்டின் மூலம் பாஜக தனது அரசாங்கத்தின் பணிகளைத் தடுக்கிறது.

பாஜக தங்களை ராம பக்தர் என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் மருத்துவமனைகளில் ஏழை மக்களுக்கு மருந்துகளை நிறுத்தியது ஏன்? ஏழை மக்களுக்கு மருந்துகளை நிறுத்துமாறு ராமர் கேட்டாரா? என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com