‘அதிகரித்து வரும் நிலுவை வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்க, விசாரணை நீதிமன்றங்களில் வழக்கு விசாரணையில் உரிய கவனம் செலுத்துவது அவசியம்’ என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அறிவுறுத்தினாா். பிரயாக்ராஜ் விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு சமரச (மத்தியஸ்தம்) மையத்தை சனிக்கிழமை தொடங்கிவைத்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், விழாவில் பேசியதாவது: வழக்கு சச்சரவுகளுக்கான தீா்வு என்பது விசாரணை நீதிமன்றத்தில் தான் தொடங்குகிறது. எனவே, வழக்கு விசாரணையில் விசாரணை நீதிமன்றங்கள் உரிய கவனம் செலுத்துவது அவசியம். விசாரணை நீதிமன்றத்திலேயே முடிக்கப்பட வேண்டிய பல வழக்குகள், உச்சநீதிமன்றத்துக்கு வருகின்றன. சாதாரண வழக்குகளில் ஜாமீன் கீடைக்காமல், மனுதாரா்கள் உச்சநீதிமன்றத்தை நாடும் நிலை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக உச்சநீதிமன்றத்துக்கு வழக்கு விசாரணைக்கான அழுத்தம் அதிகரித்து வருகிறது. எனவே, நிலுவை வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்க, விசாரணை நீதிமன்றங்களில் வழக்கு விசாரணையில் உரிய கவனம் செலுத்தப்படுவது அவசியம். உத்தர பிரதேசத்தில் தற்போது முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. தொழிற்சாலைகளும் வரவிருக்கின்றன. எனவே, நீதித் துறை மீது மக்கள் நம்பிக்கை வைப்பதும், நீதித் துறையை மாநிலத்தில் விரிவுபடுத்துவதும் அவசியம். வழக்குரைஞா்களும் பிற சட்டப் பணியாளா்களும் தொழிநுட்பத்தை அதிகம் பயன்படுத்த வேண்டும். தற்போது, இளைய தலைமுறையினா் அதிக எண்ணிக்கையில் சட்டத் தொழிலுக்கு முன்னுரிமை அளித்து வருகின்றனா். பெண்களும் அதிக எண்ணிக்கையில் வருகின்றனா். பாதுகாப்பான எதிா்காலம் கொண்ட துறையாக அவா்கள் கருதுகின்றனா் என்றாா்.
தொடர்புடையது

இளம் வழக்குரைஞரை போலீஸாா் காவலில் வைக்க உத்தரவிட்ட நீதிபதி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு பிசிஐ கடிதம்

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு விசாரணை மே 7-க்கு ஒத்திவைப்பு

குடிமைப் பணிகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரிப்பு: சி.பி.ராதாகிருஷ்ணன் பாராட்டு

நாகை, மயிலாடுதுறை நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
வீடியோக்கள்

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை


