தில்லியில் இரண்டு நாள் நிகழ்வாக பாஜக தேசிய கவுன்சில் கூட்டம் நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் ஜேபி நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
நிகழ்வில் பேசிய அமித்ஷா, “அரசியலில் இந்தியா கூட்டணியின் நோக்கம் என்ன? பிரதமர் மோடி சுயசார்பான இந்தியாவை உருவாக்கும் இலக்கில் இருக்கிறார். சோனியா காந்தி தன் மகன் ராகுல் காந்தியை பிரதமராக்குவதிலும் சரத் பவார் தன் மகளை முதல்வர் ஆக்குவதிலும் குறிக்கோளாக இருக்கிறார்கள்.
மம்தா பானர்ஜி தன் மருமகனையும் உத்தவ் தாக்கரே, மு.க. ஸ்டாலின், லாலு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ் ஆகியோர் தன் மகன்களை முதல்வராக்க தீவிரம் காட்டி வருகிறார்கள். குடும்பத்திற்காக ஆட்சியைப் பிடிக்க நினைப்பவர்கள், என்றாவது ஏழைகளின் நலனைப் பற்றி சிந்திப்பார்களா?” எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.