உச்சநீதிமன்ற ஒப்புதல் இல்லாமல் புதிய உயிரியல் பூங்கா தொடங்கக் கூடாது


புது தில்லி: தங்களிடம் முன்அனுமதி பெறாமல் இனி புதிய உயிரியல் பூங்கா தொடங்கவோஅல்லது வனப்பகுதி வாகன சேவைகளை தொடங்கவோ கூடாது என வனப் பாதுகாப்பு குறித்து மாநில, யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை அறிவுறுத்தியது.
வனப் பாதுகாப்பு திருத்தச் சட்டம் 2023-இல் குறிப்பிட்டுள்ள "வனம்' என்ற விளக்கத்தின் கீழ் நாட்டிலுள்ள 1.99 லட்சம் சதுர கி.மீ. வனநிலம் விடுபட்டுள்ளதாகவும் அந்நிலங்கள் வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுவதாகவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
வனப் பாதுகாப்பு திருத்தச் சட்டம், 2023-க்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜெ.பி. பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு திங்கள்கிழமை விசாரித்தது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது: உச்சநீதிமன்றத்தின் முன்அனுமதி பெறாமல் உயிரியல் பூங்கா தொடங்கவோஅல்லது வனப் பகுதியில் வாகன சேவைகளை தொடங்கவோ கூடாது என மாநில, யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது' என்றனர்.
அதுவரையில் 1996-ஆம் ஆண்டு கோதவர்மன் திருமால்பட் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள "வனம்' என்ற விளக்கத்தை மாநில, யூனியன் பிரதேசங்கள் பயன்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
மேலும் வனம் மற்றும் வனம் சார்ந்த பகுதிகள் குறித்து அனைத்து விவரங்களையும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மார்ச்-31-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும். அந்த விவரங்களை ஏப்ரல் 15-ஆம் தேதிக்குள் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அதன் வலைதளத்தில் வெளியிடும் என நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...