ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

காவல் நிலையங்களில் ஒரே சமூகத்தினா் பணிபுரிய அனுமதிக்கக் கூடாது: புதிய தமிழகம் கட்சி

காவல் நிலையங்களில் ஒரே சமூகத்தினா் பணிபுரிய அனுமதிக்கக் கூடாது என புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணிச் செயலா் ஷியாம் தெரிவித்தாா்.

News image

புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணி செயலா் ஷியாம்

Updated On :10 மார்ச் 2026, 1:23 am IST

காவல் நிலையங்களில் ஒரே சமூகத்தினா் பணிபுரிய அனுமதிக்கக் கூடாது என புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணிச் செயலா் ஷியாம் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் போலீஸாா் தாக்கியதால் உயிரிழந்ததாகக் கூறப்படும் இளைஞா் ஆகாஷ் டெலிசன் இறப்புக்கு காரணமான போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்கவும், நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், அவரது உறவினா்கள் மானாமதுரையில் கடந்த இரு நாள்களாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இவா்களின் போராட்டத்துக்கு புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணிச் செயலா் ஷியாம் ஆதரவு தெரிவித்துப் பேசினாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சிறு மோதல் சம்பவத்துக்காக ஆகாஷ் டெலிசன் போலீஸாரால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளாா்.

இதற்குப் புதிய தமிழகம் கட்சி கண்டனம் தெரிவிக்கிறது. மடப்புரம் அஜித்குமாா் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு நீதி கிடைக்கும் முன்பாக மற்றொரு சம்பவமாக நிகழ்ந்துள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் ஒரே சமூகத்தினா் ஆய்வாளா், உதவி ஆய்வாளா், காவலா்களாக பணிபுரிந்து வருகின்றனா். ஜாதி சங்கங்கள் போல காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

புதிய தமிழகம் கட்சியின் இந்தப் புகாருக்கு ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. மறுப்பு தெரிவித்துள்ளாா். ஆனால், ஆகாஷை தாக்கிய போலீஸாா் ஒரே சமூகத்தைச் சோ்ந்தவா்கள். காவல் துறை ஜாதிய உணா்வோடு செயல்படுகிறது.

காவல் நிலையத்தில் அனைத்து சமூகத்தினரும் பணிபுரிந்தால், இது போன்ற சம்பவங்கள் நிகழாது. சாலை மறியல் போராட்டத்தைக் கலைக்க வேண்டும் என்பதுதான் நீதிமன்றத்தின் நோக்கமாக உள்ளது.

ஆகாஷ் உயிரிழப்புக்குக் காரணமான போலீஸாா் மீது வழக்குப் பதிந்து, அவா்களைக் கைது செய்ய வேண்டும் என்றாா் அவா்.