மாதிரி படம்
மாதிரி படம்ENS

பிச்சை எடுப்பதற்காக ஆள்மாறாட்டம்: 4 பேர் கைது

உடல் ஊனம் போலி: மக்களை ஏமாற்றி பிச்சை எடுத்த நபர்கள் கைது

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த நால்வரை ஒடிசா காவலர்கள் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள பெர்ஹாம்பூர் நகரில் கைது செய்தனர்.

உடல் ஊனமுற்று இருப்பது போல நடித்து இவர்கள் பிச்சை எடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

காது கேளாதவர்கள் போலவும் கை கால்கள் முடங்கியவர்கள் போலவும் தங்களைக் காட்டிக் கொண்டனர்.

சாலைகளில் பிச்சை எடுத்து வந்த இவர்கள் பார்ப்பதற்கு உடல் ஊனமுற்றவர்களைப் போல தோன்றாததால் காவலர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் அவர்களுக்கு உடலளவில் எந்த பிரச்னையும் இல்லாதது தெரிய வந்தது.

இவர்கள் மக்களை ஏமாற்றி பணம் பெற்றதாக காவலர்கள் தெரிவித்தனர்.

20 முதல் 32 வயதுக்குள் இருக்கும் நால்வரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக காவலர்கள் தெரிவித்தனர்.

முன்னதாக ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களா என்கிற கோணத்தில் காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com