திருமணத்துக்காக ‘ஸ்மைல் டிசைன்’ அறுவை சிகிச்சை: மணமகன் உயிரிழப்பு!
ஹைதராபாத்தில் திருமணத்துக்காக ‘ஸ்மைல் டிசைன்’ அறுவை சிகிச்சை மேற்கொண்ட மணமகன் உயிரிழப்பு
லக்ஷ்மி நாராயண் விஞ்சன்
லக்ஷ்மி நாராயண் விஞ்சன்
ஹைதராபாத்தில் திருமணத்துக்காக ‘ஸ்மைல் டிசைன்’ அறுவை சிகிச்சை மேற்கொண்ட மணமகன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியை சேர்ந்த லக்ஷ்மி நாராயண் விஞ்சன்(வயது 28) என்பவருக்கு விரைவில் திருமணம் நடைபெறவிருந்தது.
இந்த நிலையில், கடந்த 16-ஆம் தேதி தனியார் பல் மருத்துவமனையில் பற்களை அழகுப்படுத்தும் ‘ஸ்மைல் டிசைன்’ அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், சிறிது நேரத்திலேயே விஞ்சன் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து, பல் அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்களின் அலட்சியத்தால் தனது மகன் உயிரிழந்ததாக விஞ்சனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, மருத்துவமனை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை தரப்பில் அளித்த விளக்கத்தில்,
“திருமணம் நடைபெறவிருப்பதால் உடனடியாக பல் அறுவை சிகிச்சை செய்ய விஞ்சன் கோரினார். அறுவை சிகிச்சை முறைப்படி செய்யப்பட்டது. அவருக்கு எந்த மருத்துவ பிரச்னையும் இல்லை.
இந்த அறுவை சிகிச்சைக்கு மிகவும் குறைந்த அளவிலேயே மயக்க மருந்து அளிக்கப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பிறகு மருத்துவரிடம் நன்றாகதான் பேசிக் கொண்டிருந்தார். இவை அனைத்து சிசிடிவியில் பதிவாகியுள்ளது. காவல்துறைக்கு விடியோ அளிக்கப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...