சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் வீட்டில் சிபிஐ சோதனை!

News image
Updated On :22 பிப்ரவரி 2024, 10:26 am

DIN

தில்லியில் உள்ள ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் வீடு உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ சோதனை நடத்தினர்.

2019-ல் பதவி வகித்த சத்யபால் மாலிக், அவரது பதவிக் காலத்தில் மின் திட்ட ஒப்பந்தத்துக்காக ஊழல் நடந்தாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் தில்லியில் உள்ள முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் வீடு உள்ளிட்ட 30 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதுதொடர்பாக சத்பால் மாலிக்கின் எக்ஸ் பதிவில்,

கடந்த நான்கு நாள்களாக நான் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். இருந்தபோதிலும், எனது வீட்டை சர்வாதிகாரிகளின் விசாரணை அமைப்புகள் மூலம் சோதனை நடத்தப்படுகிறது.

நான் ஒரு விவசாயி மகன். இந்த சோதனைகளுக்கு எல்லாம் நான் பயப்படமாட்டேன். நான் விவசாயிகளுடன் இருக்கிறேன்.

எனது உதவியாளர், ஓட்டுநரிடம் சோதனை செய்து தேவையில்லாமல் துன்புறுத்துகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.