ஒவ்வொரு குடும்பத்திற்கும் விடியலை தந்துள்ளோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் விடியலை தந்துள்ளோம் என சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது...
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
Updated on
1 min read

தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் விடியலை தந்துள்ளோம் என சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த ஜன. 20 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆனால் முதலில் தேசிய கீதம் பாடப்படவில்லை என்று கூறி ஆளுநர் தனது உரையை வாசிக்காமல் அவையில் இருந்து வெளியேறினார்.

தொடர்ந்து 3 நாள்கள் அவை செயல்பட்ட நிலையில் ஆளுநர் உரைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை பதிலுரை அளித்து வருகிறார். முதல்வரின் பதிலுரையை அதிமுக புறக்கணித்து அவையில் பங்கேற்கவில்லை.

பதிலுரையில் முதல்வர் பேசுகையில்,

ஒவ்வொரு குடும்பத்திற்கும் விடியலை தந்துள்ளோம்

இன்றைக்கு தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட அதிக வளர்ச்சி அடைந்துள்ள. மற்ற மாநிலங்கள் தமிழ்நாட்டை அண்ணாந்து பார்க்கிறது. ஆறாவது முறை ஆட்சி அமைந்த போது, அது விடியல் ஆட்சியாக அமையும் என்றோம். அந்த விடியலை ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஏற்படுத்தி கொடுத்துள்ளோம்.

கடந்து 5 ஆண்டுகள், வரப்போகும் ஒளிமயமான எதிர்காலத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளன. கோடிக்கணக்கான மக்கள் மனங்களிலும் முகங்களிலும் மகிழ்ச்சியையும் மனநிறைவையும் நான் பார்க்கிறேன் என்றார்.

அண்ணனின் சீர்

திராவிட மாடல் ஆட்சிப் பொறுப்பேற்றதும் நான் இட்ட முதல் கையெழுத்து மகளிருக்கு கட்டணமில்லா விடியல் பயணம் ஆகும். மாதம் தோறும் ரூ.800 முதல் 1,200 வரை ஒவ்வொரு மகளிரும் சேமிக்கிறார்கள்.

அதேபோல், 1 கோடியே 31 லட்சம் மகளிர் மாதம் தோறும்ரூ.1000 கலைஞர் உரிமைத் தொகை பெறுகிறார்கள். இதுவரை ஒவ்வொரு மகளிரும் ரூ.29,000 பெற்றுள்ளார்கள். இதனை எங்க அண்ணன் கொடுக்கும் மாதாந்திர சீர் என்று மகளிர் பெருமையுடன் சொல்கிறார்கள் என பேரவையில் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

சோதனைகள் புதிதல்ல

அளவுக்கு அதிகமாந சோதனைகள் எதிர்கொண்ட எனக்கு, எந்த சோதனைகளும் புதிதல்ல. என்னைச் சீண்டிப்பார்ப்பவர்கள் மனசுக்குள் மகிழ்ச்சி அடையலாமே தவிர, அது என் மனதை எதுவும் செய்துவிடாது.

புகழ்ச்சி அல்ல... உண்ணை!

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ன செய்தான் என்றால் ஒவ்வொரு நாளும் மக்களுக்காக வாழ்ந்தான். மக்களுக்காகத் திட்டங்களை தீட்டினான். மாநிலத்தை வளர்த்தெடுத்தான். இவை அனைத்து வெறும் புகழ்ச்சி அல்ல, உண்மை என்றார்.

வரலாறாகப் பதிவு

திராவிட மாடல் அரசு பொறுப்பேற்று இன்றுடன் 1,724 நாட்கள் ஆகின்றன. இதுவரை 8,655-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன். 15,117 கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளேன். பிற மாவட்டங்களுக்கு 173 முறை பயணம் மேற்கொண்டுள்ளேன். 71 முறை மாவட்ட அரசு நலத்திட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன். 44 லட்சத்து 44 ஆயிரத்தி 721 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளேன். மக்களுக்காக நான் செய்த அனைத்தும் வரலாறாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

Summary

We have brought dawn to every family: Chief Minister M.K. Stalin's speech

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
பதிலுரை அளிக்க வேண்டிய நான், ஆளுநருக்கு விளக்கமளிக்க வேண்டிய நிலை! - முதல்வர் பேச்சு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com