விடுதியில் பாலியல் தொழில்: பாஜக பிரமுகர் கைது

விடுதியில் பாலியல் தொழில்: பாஜக பிரமுகர் கைது

பாஜக பிரமுகர் உள்ளிட்ட 11 பேர் கைது: பாலியல் வழக்கில் சிக்கினர்

மேற்கு வங்கம் ஹெளரா மாவட்டத்தில் பாஜக பிரமுகர் உள்ளிட்ட 11 பேர் பாலியல் தொழில் நடத்தி வந்த குற்றச்சாட்டில் காவலர்களால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சப்யாஷேசி கோஷ், பாஜக பிரமுகரான இவர், இவரது 10 கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் பாலியல் தொழில் நடத்துவதாக அந்த மாநில பாஜக குற்றச்சாட்டு முன்வைத்து வந்தது. இந்த நிலையில் பாஜக பிரமுகர் கைதாகியுள்ளதை திரிணமூல் விமர்சித்துள்ளது.

திரிணமூல் கட்சியின் எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

சப்யாஷேசி ஹெளராவின் சங்ரய்ல் பகுதியில் உள்ள அவரது விடுதியில் பதின்பருவ பெண்களைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தது கண்டறியப்பட்டது. 11 குற்றவாளிகளையும் 6 பாதிக்கப்பட்ட பெண்களையும் காவலர்கள் கைது செய்துள்ளனர். இதுதான் பாஜக. அவர்கள் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறார்கள் என பதிவிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com