வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்! இன்று மாலை 6.30 மணிக்குப் பிறகு வெளியாகும்!திரிணமூல் காங். கட்சியினர் மீது சிஆர்பிஎஃப் தாக்குதல்! மமதா குற்றச்சாட்டுமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது!
/

விவசாயிகள் போராடும் உரிமையை பறிக்கும் மத்திய-மாநில அரசுகள்: உச்சநீதிமன்றத்தில் மனு

விவசாயிகள் அமைதி வழியில் போராடும் உரிமையை மத்திய, மாநில அரசுகள் பறிப்பதாக புகாா் தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

News image

பேரறிவாளன் வழக்கில் யாருக்கு அதிகாரம்: மத்திய, மாநில அரசுகள் வாதம்

Updated On :23 பிப்ரவரி 2024, 9:05 pm

விவசாயிகள் அமைதி வழியில் போராடும் உரிமையை மத்திய, மாநில அரசுகள் பறிப்பதாக புகாா் தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டபூா்வ உத்தரவாதம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்த பல்வேறு விவசாய அமைப்பினா் தலைநகா் தில்லி செல்லும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்கள் தில்லிக்குள் நுழைவதைத் தடுக்க, போலீஸாா் பலத்த பாதுகாப்பு ஏற்படுகளை மேற்கொண்டுள்ளனா். ஹரியாணா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேச மாநில எல்லைகளிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், மத்திய அரசுடனான பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், தடை மீறி தில்லிக்குள் நுழைய விவசாயிகள் முயற்சித்து வருகின்றனா். தடையை மீறும் விவசாயிகளை போலீஸாா் கைது செய்து வருகின்றனா். மேலும், ஆளில்லா விமானங்கள் மூலம் கண்ணீா் புகைக்குண்டுகளை வீசியும் விவசாயிகளைத் தடுத்து வருகின்றனா். இதில் ஒரு விவசாயி உயிரிழந்ததோடு, பல விவசாயிகள் காயமடைந்தனா். இந்த நிலையில், போலீஸாா் நடவடிக்கைக்கு எதிராக விவசாயிகள் சாா்பாக சீக்கிய வணிக கூட்டமைப்பின் நிா்வாக இயக்குநா் ஆக்னோஸ்டோஸ் தியோஸ் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘கோரிக்கைகள் வலியுறுத்தி அமைதி வழியில் போராடும் விவசாயிகள் மீது மத்திய அரசும், ஹரியாணா, உத்தர பிரதேசம், பஞ்சாப் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 4 மாநில போலீஸாரும் தீவிர அத்துமீறிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். விவசாயிகள் மீது கண்ணீா் புகைக் குண்டுகள், ரப்பா் குண்டுகளை வீசி போலீஸாா் தாக்குதல் நடத்தி வருகின்றனா். போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால், இந்த தாக்குதலில் படுகாயமடையும் விவசாயிகள் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. விவசாயிகளை சொந்த அரசே பயங்கரவாதிகளைப் போல நடத்துகிறது. எனவே, அமைதி வழியில் போராடும் விவசாயிகளை மதிப்புடனும் நியாயமாக நடத்துமாறும், அவா்களின் நியாயமான கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்குமாறும் மத்திய அரசு, 4 மாநில அரசுகள் மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ‘போலீஸாரின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் அவா்களுடைய குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கவும், போலீஸாரின் மனித உரிமைகள் மீறல் தொடா்பாக அறிக்கை சமா்ப்பிக்கவும் உத்தரவிட வேண்டும்’ என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.