
மும்பை: ஏர் இந்தியா நிறுவனம் ஏ350 மற்றும் பி777 ரக விமானங்களை விரிவுபடுத்துவதால், அமெரிக்க நகரங்களுக்கு அதிக தூர விமான சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டாடா குழுமத்திற்கு சொந்தமான விமான நிறுவனம், விஸ்தாராவின் முன்மொழியப்பட்ட இணைப்பு உள்பட அதன் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்திய நகரங்களிலிருந்து சியாட்டில், லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் டல்லாஸுக்கு நேரடி விமானங்களைத் தொடங்க திட்டமிட்டுள்ளது.
தற்போது வாஷிங்டன், நியூயார்க், நெவார்க், சான் பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோ ஆகிய இடங்களுக்கு விமானங்களை இயக்கும் ஒரே இந்திய விமான நிறுவனமாக ஏர் இந்தியா உள்ளது. அதே வேளையில் ஏ350 விமானம் சியாட்டிலுக்கும், பி777 ரக விமானங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் டல்லாஸுக்கும் இயக்கப்படலாம் என தெரிவித
அமெரிக்க நகரங்களுக்கான விமானங்களைத் தவிர, ஏர் இந்தியா தில்லி மற்றும் மும்பையிலிருந்து லண்டன் ஹீத்ரோவுக்கு தனது பி 777 விமானங்களை இயக்க பரிசீலித்து வருகிறது.
தற்போது, தில்லி மற்றும் மும்பையிலிருந்து பி787 மூலம் லண்டனுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. அடுத்த மாதம் பெங்களூருவிலிருந்து லண்டன் கேட்விக் செல்லும் போயிங் ட்ரீம்லைனர் விமானத்துடன் விமான சேவையை தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு ஏர் இந்தியா, ஏர்பஸ் மற்றும் போயிங் ஆகிய நிறுவனங்களிடம் 470 விமானங்களுக்கான ஆர்டர்களை வழங்கியது.