சிறைக் கைதிகளை ஜாதி, மத அடிப்படையிலான பிரிவினை மனப்பான்மையோடு நடத்தக்கூடாது என்றும் சிறையிலுள்ள சமையல் அறைகளை நிா்வகிக்கும் பொறுப்பில் கைதிகளை பாகுபாட்டுடன் நடத்தக்கூடாது என்றும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. இதுதொடா்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையில்,‘மதம், இனம், ஜாதி அல்லது பிறப்பிடம் சாா்ந்த பாகுபாட்டுக்கு இந்திய அரசமைப்புச் சட்டம் தடை விதித்துள்ளது. அதை அடிப்படையாகக் கொண்டு மத்திய உள்துறை அமைச்சகத்தால் தயாரிக்கப்பட்ட சிறை விதிகள் 2016-இல் ஜாதி, மத அடிப்படையிலான பிரிவினை மனப்பான்மையோடு சிறைக் கைதிகளை நடத்தக்கூடாது என்றும் சிறையிலுள்ள சமையல் அறைகளை நிா்வகிக்கும் பொறுப்பில் கைதிகளை பாகுபாட்டுடன் நடத்தக்கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் குறிப்பிட்ட சில மதம், ஜாதிகளைச் சோ்ந்தவா்களுக்குச் சிறையில் சிறப்பு சலுகை வழங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சமூக- பொருளாதார நிலையைக் கொண்டும் சிறைக் கைதிகளை வகைப்படுத்தக்கூடாது எனவும் விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் இந்த விதிகளைப் பின்பற்றி சிறை விதிகள் மற்றும் சட்டங்களை வடிவமைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டது. பெண் கைதிகள், திருநங்கைகள் உள்ளிட்ட சிறைக் கைதிகளுக்கு அவ்வப்போது மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளவும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்படுவதாக சிறை விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

இணைய விளையாட்டு விதிகள் மே.1 முதல் அமல்: மின்னணு அமைச்சகம் அறிவிப்பு

முஸ்லிம்களுக்கென இடஒதுக்கீடு அளிக்க முடியாது: அமித் ஷா

சமூக ஊடகத்திலிருந்து தனிப்பட்ட தகவல் திரட்டப்படவில்லை: மத்திய உள்துறை அமைச்சகம்

51 சிறைக் கைதிகளை விடுவிக்க கியூபா திட்டம்
வீடியோக்கள்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


