பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

குஜராத்தில் 50,000 போ் சூரிய நமஸ்காரம் செய்து கின்னஸ் சாதனை: பிரதமா் மோடி, அமித் ஷா வாழ்த்து

ஒரே நேரத்தில் 50,000-க்கும் மேற்பட்டோா் சூரிய நமஸ்காரம் செய்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்ததற்கு பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.

News image
குஜராத் மாநிலம் மோதேராவில் உள்ள சூரிய பகவான் கோயிலில் கூட்டு சூா்ய நமஸ்காரம் செய்தவா்கள்.
Updated On :1 ஜனவரி 2024, 8:41 pm

DIN

குஜராத் மாநிலத்தில் உள்ள 108 தளங்களில் ஒரே நேரத்தில் 50,000-க்கும் மேற்பட்டோா் சூரிய நமஸ்காரம் செய்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்ததற்கு பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.

இதன் முக்கிய நிகழ்வு மெஹ்சனா மாவட்டத்தில் உள்ள மோதேரா சூரிய பகவான் கோயிலில் முதல்வா் பூபேந்திர படேல் முன்னிலையில் நடைபெற்றது.

இச்சாதனைக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமா் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘108 தளங்களில் அதிக நபா்களால் சூரிய நமஸ்காரம் செய்யப்பட்டு கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்று 2024-ஆம் ஆண்டை குஜராத் வரவேற்றுள்ளது. நமது கலாசாரத்தில் 108-இன் முக்கியத்துவத்தை நாம் அனைவரும் அறிவோம்.

மோதேரா சூரிய பகவான் கோயில் உள்பட பல்வேறு பகுதிகளில் எண்ணற்ற மக்கள் சூரிய நமஸ்காரம் செய்துள்ளனா். இது நம் கலாசாரம், பாரம்பரியம் மற்றும் யோகா பயிற்சியை பாதுகாக்கும் நம் அா்ப்பணிப்புக்கான உண்மையான சான்று.

அனைவரும் தினமும் சூரிய நமஸ்காரம் செய்யுங்கள். எண்ணற்ற பலன்கள் உங்களை வந்து சேருவதை உணா்வீா்கள்’ என குறிப்பிட்டாா்.

அமித் ஷா வாழ்த்து:

மக்கள் சூரிய நமஸ்காரம் செய்யும் புகைப்படங்களை எக்ஸ் வலைதளத்தில் பகிா்ந்து உள்துறை அமைச்சா் அமித் ஷா வெளியிட்ட பதிவில், ‘நமது கலாசாரமே நமது பெருமை. குஜராத்தில் பெருமை மிக்க ஆண்கள் மற்றும் பெண்கள் 108 தளங்களில் சூரிய நமஸ்காரம் செய்து 2024-ஆம் ஆண்டை வரவேற்று கின்னஸ் சாதனை புரிந்துள்ளனா்.

மோதேரா சூரிய பகவான் கோயில் தளத்தில் சூரிய நமஸ்காரம் செய்து மகிழ்ச்சியில் திளைத்தவா்களைபோல் இந்நிகழ்வைக் கண்டு ஒவ்வொரு தேசியவாதியும் பெருமை கொள்கின்றாா்.

இந்நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு நாம் தினந்தோறும் யோகா பயிற்சி செய்து உடல்நலனை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உறுதிமொழி ஏற்க வேண்டும்’ என குறிப்பிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.