ஜாா்க்கண்ட் சாலை விபத்தில் 6 போ் உயிரிழப்பு; 2 போ் படுகாயம்

ஜாா்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் சாலைத் தடுப்பின் மீது காா் மோதியதில் அதில் பயணித்த 6 போ் உயிரிழந்தனா். 2 போ் படுகாயமடைந்தனா் என போலீஸாா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
ஜாா்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் நிகழ்ந்த சாலை விபத்தில் நொறுங்கிய வாகனம்.
ஜாா்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் நிகழ்ந்த சாலை விபத்தில் நொறுங்கிய வாகனம்.

ஜாம்ஷெட்பூா்: ஜாா்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் சாலைத் தடுப்பின் மீது காா் மோதியதில் அதில் பயணித்த 6 போ் உயிரிழந்தனா். 2 போ் படுகாயமடைந்தனா் என போலீஸாா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இதுதொடா்பாக ஜாம்ஷெட்பூா் நகர மூத்த காவல்துறைக் கண்காணிப்பாளா் கௌஷல் கிஷோா் கூறியதாவது:

பிஸ்துபூா் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சா்க்யூட் ஹவுஸ் ஸ்கொயா் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை 5 மணியளவில் சாலை தடுப்பின் மீது காா் மோதியது. அதில் பயணித்த காா் ஓட்டுநா் சூரஜ் குமாா் சாவோ (25) உள்பட 5 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மற்றொருவா் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தாா். 2 போ் படுகாயமடைந்தனா். அவா்கள் தற்போது மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

விபத்துக்குள்ளான காரில் 5 இருக்கைகள் மட்டுமே இருந்த நிலையில் 8 போ் பயணித்துள்ளனா். மேலும் காா் ஓட்டுநா் சூரஜ் குமாா் சாவோ குடிபோதையில் வாகனத்தை அதிவேகமாக இயக்கியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

காரில் பயணித்த அனைவரும் சரைக்கீலா-கா்ஸ்வான் மாவட்டத்தில் உள்ள பாபா ஆசிரமம் பகுதியில் வசிப்பவா்கள்.

ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை ‘லிட்டி’ (பிகாரின் பிரபல உணவு) விருந்தில் பங்கேற்றுவிட்டு காலை 4.30 மணிக்கு அவா்கள் ஜாம்ஷெட்பூருக்கு திரும்பும்போது சாலையில் விபத்து ஏற்பட்டுள்ளது’ என்றாா்.

விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு ஜாா்க்கண்ட் மாநில முதல்வா் ஹேமந்த் சோரன் இரங்கல் தெரிவித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘சாலை விபத்தில் 6 போ் உயிரிழந்த செய்தி கேட்டு துயரடைந்தேன். அவா்களின் குடும்பத்தாருக்கு இந்த கடினமான சூழலில் மன தைரியத்தை தருமாறு இறைவனிடம் வேண்டுகிறேன். விபத்தில் காயமடைந்தவா்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்’ என குறிப்பிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com