தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு அமலாக்கத்துறை அழைப்பான் அனுப்பியது தொடர்பாக, ஆம் ஆத்மி கட்சி சட்டப்படி செயல்படும் எனத் தலைமை தேசிய செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
திலி அரசின் கலால் கொள்கை ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் விசாரணை நடத்துவதற்காக ஜனவரி 3-ம் தேதி ஆஜராகுமாறு தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கேஜரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
கேஜரிவால் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராவாரா என்று செய்தியாளர் சந்திப்பின்போது கக்கரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் இந்த கேள்விக்கு பதிலளிக்க எங்கள் சட்டக் குழு தயாராக இருக்கும். சட்டப்படி செயல்படுவோம் என்றார்.
நவம்பர் 2 மற்றும் டிசம்பர் 21-ம் தேதிக்கு ஆஜராகுமாறு முன்னதாக இரண்டு சம்மன்கள் அனுப்பப்பட்ட நிலையில், அதனைத்தொடர்ந்து ஜனவரி 3-ம் தேதிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு கேஜரிவாலுக்கு மூன்றாவது அழைப்பாணையை அமலாக்கத்துறை அனுப்பியுள்ளது.
தில்லி அரசின் கலால் கொள்கை ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் ஏற்கனவே துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் ஆம் ஆத்மி எம்.பி.சஞ்சய் சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விசில் புரட்சி நடக்கும்; 200-க்கும் மேற்பட்ட இடங்களில் தவெக வெல்லும்! செங்கோட்டையன்
கட்சியில் இணைய அழுத்தம்தான் காரணமா? பாஜக மீது திமுக குற்றச்சாட்டு

பருவநிலை மாற்றத்தால் பொழியும் கனமழை... சோலை வனமாகும் ஈரான்! அமெரிக்க ரேடார்கள் அழிப்பு காரணமா?

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் - பாஜக இடையேதான் போட்டி: பாஜக
வீடியோக்கள்

மனைவியை விதவை என விமர்சித்த தொகுப்பாளர்! கோவத்தில் Trump | Jimmy Kimmel
இணையதளச் செய்திப் பிரிவு

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு


