நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறலில் ஈடுபட்ட பெண்ணின் ஜாமீன் மனு ஜனவரி 10ல் விசாரணை

நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறலில் ஈடுபட்ட பெண்ணின் ஜாமீன் மனு மீதான விசாரணையை ஜனவரி 10-ம் தேதிக்கு ஒத்திவைத்து தில்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறலில் ஈடுபட்ட பெண்ணின் ஜாமீன் மனுவை ஜனவரி 10-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாதுகாப்பு அத்துமீறலில் ஈடுபட்ட பெண்ணின் ஜாமீன் மனு மீது பதிலளிக்குமாறு தில்லி காவல்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தது தில்லி பாட்டியாலா நீதிமன்றம்.

குற்றம் சாட்டப்பட்டுள்ள 6 பேர் மீதான 'பாலிகிராப்' சோதனைக்கு அனுமதி கோரிய தில்லி காவல்துறையின் மனு மீதான விசாரணையை ஜனவரி 5-ம் தேதிக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

லலித் ஜா, நீலம் ஆசாத், மனோரஞ்சன், சாகர், மஹேஷ் குமாவத் மற்றும் அமோல் ஷிண்டே ஆகிய ஆறு பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கிடையே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 

சிறப்பு அரசு வழக்கறிஞர் அகாந்த் பிரதாப் சிங் அவர்களின் ஜாமீன் மனுவை எதிர்த்து வாதாடினார்.

அதனைத் தொடர்ந்து கூடுதல் அமர்வு நீதிபதி ஹர்தீப் கௌர் ஜாமீன் மனு மீது பதிலளிக்குமாறு தில்லி காவல்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஜனவரி 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

முன்னதாக, கடந்த டிச. 13-ஆம் தேதி மக்களவையில் பாா்வையாளா்கள் மாடத்தில் இருந்து சாகா் சா்மா, மனோரஞ்சன் ஆகிய இரு இளைஞா்கள் அவைக்குள் திடீரென குதித்து, வண்ணப் புகைக் குப்பிகளை வீசி, நாட்டில் ‘சா்வாதிகாரம் நடைபெறக் கூடாது’ என்று முழக்கங்களை எழுப்பினா்.

அதே வேளையில், நாடாளுமன்றத்துக்கு வெளியே அமோல் ஷிண்டே, நீலம் ஆகிய இருவா், புகையை உமிழும் குப்பிகளை வீசி போராட்டத்தில் ஈடுபட்டனா். இவர்கள் நால்வர் மற்றும் இந்த நிகழ்வுக்கு சதித்திட்டம் தீட்டியதாகக் லலித் ஜா, மகேஷ் குமாவத் என மொத்தம் ஆறு பேர் கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com