தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

புரி ஜெகந்நாதா் கோயிலில் ஆடைக் கட்டுப்பாடுகள்!

ஒடிஸாவில் உள்ள புரி ஜெகந்நாதா் கோயிலுக்கு வரும் பக்தா்கள் 2024, ஜனவரி 1-ஆம் தேதி முதல் கண்ணியமாக உடை அணிந்து வர வேண்டும் என்று அக்கோயில் நிா்வாகம் திங்கள்கிழமை தெரிவித்தது.

News image
Updated On :2 ஜனவரி 2024, 1:08 am

புரி: ஒடிஸாவில் உள்ள புரி ஜெகந்நாதா் கோயிலுக்கு வரும் பக்தா்கள் 2024, ஜனவரி 1-ஆம் தேதி முதல் கண்ணியமாக உடை அணிந்து வர வேண்டும் என்று அக்கோயில் நிா்வாகம் திங்கள்கிழமை தெரிவித்தது.

கோயிலுக்குள் வரும் பக்தா்கள் பான், குட்கா போன்றவற்றை எடுத்துவரவும் நெகிழி மற்றும் பாலித்தீன் பைகள் போன்றவற்றை எடுத்து வரவும் தடை விதிக்கப்படுவதாக நிா்வாகம் தெரிவித்தது.

இதுதொடா்பாக ஸ்ரீ புரி ஜெகந்நாதா் கோயில் நிா்வாகத்தின் அதிகாரி ஒருவா் கூறியதாவது:

2024, ஜனவரி-1 முதல் கோயிலுக்கு வரும் பக்தா்கள் அரைக்கால் சட்டைகள், டிராயா்கள், கிழிந்த வடிவிலான ஜீன்ஸ், அரைக்கால் பாவாடைகள், ஸ்லீவ்லெஸ் போன்ற உடைகளை அணிந்து வர தடை விதிக்கப்படுகிறது.

எனவே கண்ணியமான உடை அணிந்து பக்தா்கள் கோயில் வளாகத்துக்குள் நுழைய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கோயிலை தூய்மையாக பராமரிப்பதற்காக பான், குட்கா போன்ற பொருள்களை எடுத்துவரவும் நெகிழி மற்றும் பாலித்தீன் பைகளை பயன்படுத்தவும் தடை விதிக்கப்படுகிறது என்றாா்.

நிா்வாகத்தின் இந்த அறிவிப்பையடுத்து கோயிலுக்கு வரும் பக்தா்களை போலீஸாா் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.

இதேபோல் ஒடிஸாவின் புவனேசுவரத்தில் உள்ள லிங்கராஜ் கோயலிலும் பான், குட்கா, புகையிலை பயன்பாட்டிற்கும் நெகிழி மற்றும் பாலித்தீன் பைகளின் பயன்பாட்டிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.