வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

நாட்டில் 573 ஆகக் குறைந்த கரோனா பாதிப்பு!

நாட்டில் கரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது. செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 573 பேருக்கு இத்தொற்று உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :2 ஜனவரி 2024, 10:50 am

DIN

நாட்டில் கரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது. செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 573 பேருக்கு இத்தொற்று உறுதி செய்யப்பட்டது.

கரோனா பாதிப்பு காரணமாக கர்நாடகம், ஹரியாணாவில் தலா ஒருவர் என 2 போ் உயிரிழந்துள்ளதாக, மத்திய சுகாதார அமைச்சக தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த மே மாதம் 19-ஆம் தேதி கரோனா தினசரி பாதிப்பு 865-ஆக பதிவாகி இருந்தது. அதன் பிறகு பாதிப்பு குறையத் தொடங்கியது. புதிதாக பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தில்தான் பதிவாகி வந்தது.

இச்சூழலில், உலகின் பல்வேறு நாடுகளில் கரோனாவின் புதிய திரிபான ‘ஜெஎன்.1’ தொற்று பரவி வருகிறது. இந்தியாவிலும் இப்புதிய வகை கரோனா கண்டறியப்பட்டுள்ளது.

புதிய வகை கரோனா பரவல் மற்றும் குளிா்காலம் எதிரொலியாக, நாட்டில் கடந்த மாத தொடக்கத்தில் இருந்து கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வந்த நிலையில், இரண்டு நாள்களாக மீண்டும் குறைந்து வருகின்றது. கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 4,565-ஆக உயா்ந்துள்ளது.

2020-ஆம் ஆண்டு தொடக்கத்தில் கரோனா பரவத் தொடங்கியதுமுதல் இதுவரை நாட்டில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டோா் எண்ணிக்கை 4.5 கோடியாகும்; 5.3 லட்சத்துக்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன.

நாடு முழுவதும் இதுவரை 220.67 கோடி தவணை கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சக தரவுகளில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.