சபரிமலையில் ஜன.10ம் தேதியுடன் ஸ்பாட் புக்கிங் சேவை நிறுத்தம்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கூட்ட நெரிசல் அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு ஸ்பாட் புக்கிங் சேவை 10ம் தேதியுடன் நிறுத்தப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 
சபரிமலையில் ஜன.10ம் தேதியுடன் ஸ்பாட் புக்கிங் சேவை நிறுத்தம்!


சபரிமலை ஐயப்பன் கோயிலில் கூட்ட நெரிசல் அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு ஸ்பாட் புக்கிங் சேவை 10ம் தேதியுடன் நிறுத்தப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடாந்திர மண்டல பூஜை நிறைவடைந்ததைத் தொடர்ந்து கோயில் நடை சாத்தப்பட்டு, மீண்டும் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த 30-ம் தேதி மீண்டும் கோயில் நடை திறக்கப்பட்டது. 

இந்த நிலையில், மகரவிளக்கு பூஜைக்கு அதிகப்படியான பக்தர்கள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு குறைக்கப்பட்டுள்ளது. ஜன.15 வரை ஆன்லைன் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாகவும், தினமும் 80 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஜன.14, 15 தேதிகளில் ஆன்லைன் முன்பதிவு 50 ஆயிரமாகவும், ஸ்பாட் புக்கிங் 10 ஆயிரமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்பாட் புக்கிங் சேவை வரும் 10-ம் தேதியுடன் நிறுத்தப்படும் என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com