2023ல் சென்னையில் போடப்பட்ட சாலைகள் விவரம்

கடந்த 2023ஆம் ஆண்டில், சென்னை மாநகர் முழுவதும் சுமார் 4,204 தார் சாலைகளை போட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
2023ல் சென்னையில் போடப்பட்ட சாலைகள் விவரம்


கடந்த 2023ஆம் ஆண்டில், சென்னை மாநகர் முழுவதும் சுமார் 4,204 தார் சாலைகளை போட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னையில் வாகன ஓட்டிகளை அவதிக்குள்ளாக்கும் பல விஷயங்களில், மோசமான சாலைகளுக்கே முதலிடம். அந்த வகையில், கடந்த ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 4 ஆயிரம் தார்சாலைகள் போட்டிருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

அதில், 120 சாலைகள் பேருந்துகள் இயக்கப்படும் சாலைகளாக இருந்ததாகவும், இதன் ஒட்டுமொத்த தொலைவு 82 கிலோ மீட்டராகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 4084 சாலைகள் உள்பகுதிகளில் அமைந்திருந்தவை என்றும், அதன் ஒட்டுமொத்த தொலைவு 712 கிலோ மீட்டர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 2024ஆம் ஆண்டு, சென்னை மாநகரத்தில் ஒட்டுமொத்தமாக 5,500 சாலைகள் போடப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சாலைகள் போடப்பட்டதும், உடனடியாக அங்கு கழிவுநீர் கால்வாய்களை தூர்வாருதல் உள்ளிட்டப் பணிகளுக்காக சாலைகளில் பள்ளங்கள் தோண்டப்படுவது முதல், மழை நீர் சாலைகளில் நிற்கும்போது ஏற்படும் சேதம் காரணமாக, தார்சாலைகள் போடப்பட்டு சில நாள்களிலேயே பழைய அளவுக்கு குண்டும் குழியுமாக மாறிவிடுகிறது. இதனால், புதிய சாலைகள், பழைய சாலைகள் என்று மக்களால் தரம்பிரித்துப் பார்க்க முடிவதில்லை என்கிறார்கள் மக்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com