உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

பெட்ரோல் தட்டுப்பாடு: குதிரையில் உணவு டெலிவரி!

லாரி ஓட்டுநர்களின் வேலைநிறுத்தத்தால் பெட்ரோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், ஹைதராபாத்தில் குதிரையில் சென்று உணவு விநியோகம் செய்யும் விடியோ வைரலாகியுள்ளது.

Published On :

ஹைதராபாத்: லாரி ஓட்டுநர்களின் வேலைநிறுத்தத்தால் பெட்ரோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், ஹைதராபாத்தில் குதிரையில் சென்று உணவு விநியோகம் செய்யும் விடியோ வைரலாகியுள்ளது.

மத்திய அரசு அமல்படுத்தவுள்ள புதிய தண்டனை சட்டத்தின்படி, (பாரதிய நியாய சன்ஹிதா) சாலையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தெரிவிக்காமல் தப்பியோடும் கனரக வாகன ஓட்டுநருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் ரூ. 7 லட்சம் வரை அபராதம் விதிக்கும் வகையில் தண்டனை கடுமையாக்கப்பட்டுள்ளது. 

இந்த கடுமையான ஷரத்துகளை திரும்பப் பெறக் கோரி ஜம்மு- காஷ்மீா், பஞ்சாப், ராஜஸ்தான், மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களில் லாரி ஓட்டுநா்கள் திங்கள்கிழமை முதல் இன்று காலை வரை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனால் அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம், பெட்ரோல், டீசல், எல்பிஜி எரிவாயு உள்ளிட்ட எரிபொருள்களின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள பெரும்பாலான பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டதால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஹைதராபாத்தில் உணவு விநியோகம் செய்யும் ஊழியர் ஒருவர், குதிரையில் சொமேட்டோ பையை மாட்டிக் கொண்டு உணவை விநியோகிக்கும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அந்த உணவு விநியோகிக்கும் ஊழியரின் அர்ப்பணிப்பையும், புதிய முயற்சியையும் இணையவாசிகள் பாராட்டி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.