காங்கிரஸில் இணைந்த பிறகு சோனியா -  ஒய்.எஸ்.சர்மிளா சந்திப்பு

ஷர்மிளா காங்கிரஸில் இணைந்த பிறகு வியாழக்கிழமை காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தியை தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். 
காங்கிரஸில் இணைந்த பிறகு சோனியா -  ஒய்.எஸ்.சர்மிளா சந்திப்பு

புது தில்லி: வரும் மக்களவைத் தேர்தல் மற்றும் ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகளும், தற்போதைய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஷர்மிளா காங்கிரஸில் இணைந்த பிறகு வியாழக்கிழமை காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தியை தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். 

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை  நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் அவர் தனது ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்துக் கொண்டார்.

கட்சியில் இணைந்த பிறகு ஆதரவாளர்களிடம் பேசிய ஷர்மிளா, "இன்று, ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சியை காங்கிரஸ் கட்சியில் இணைத்து கொண்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சி இன்று முதல் இந்திய தேசிய காங்கிரசில் அங்கம் வகிக்கப் போவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது."

"காங்கிரஸ் கட்சி இந்த நாட்டின் மிகப்பெரிய மதச்சார்பற்ற கட்சி. காங்கிரஸ் எப்போதும் இந்தியாவின் உண்மையான கலாசாரத்தை நிலைநிறுத்தி, நமது தேசத்தின் அஸ்திவாரத்தை கட்டியெழுப்பியுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைத்து அனைத்து சமூகங்களுக்கும் இடையறாது சேவை செய்துள்ளது" என்று ஷர்மிளா கூறினார்.

காங்கிரஸ் கட்சியில் ஷர்மிளா இணைந்தது குறித்து அவரது கணவர் அனில் குமார் கூறுகையில்,"நாங்கள் காங்கிரஸ் குடும்பத்தில் ஒரு அங்கமாக இருக்க விரும்புகிறோம். கட்சியின் முடிவுகளுக்கு அவர் கட்டுப்படுவார். ஷர்மிளா காங்கிரஸில் இணைந்துள்ளது ஆந்திர அரசியலை பாதிக்கும்" என்றார்.

கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சி ஷர்மிளாவால் தொடங்கப்பட்டது.

ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைந்திருப்பது ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு பலம் சேர்க்கும் என்றும் நம்பப்படுகிறது.

வரும் மக்களவைத் தேர்தல், ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, ஷர்மிளாவுக்கு காங்கிரசில் முக்கிய பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், ஷர்மிளா காங்கிரஸில் இணைந்த பிறகு வியாழக்கிழமை காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தியை தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

இதற்கிடையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வியாழக்கிழமை (ஜன.4) கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர்கள், மாநில பிரிவு தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com