இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கானது ஆதித்யா எல்-1: சோம்நாத்

ஆதித்யா எல்-1 விண்கலம் இலக்கை வெற்றிகரமாக அடையும் என்பதில் உறுதியாக இருந்ததாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். 
இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கானது ஆதித்யா எல்-1: சோம்நாத்

ஆதித்யா எல்-1 விண்கலம் இலக்கை வெற்றிகரமாக அடையும் என்பதில் உறுதியாக இருந்ததாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். 

ஆதித்யா விண்கலம் திட்டமிட்ட இலக்கான எல்-1 புள்ளியை இன்று மாலை 4 மணிக்கு வெற்றிகரமாக எட்டியது. அங்கிருந்தவாறு சூரியனின் புறவெளிப் பகுதிகளில் ஏற்படும் மாற்றங்களை ஆதித்யா எல்-1 விண்கலம் மேற்கொள்ளவுள்ளது.

இந்நிலையில், ஆதித்யா  திட்டமிட்டபடி எல்-1 புள்ளியை அடைந்தது குறித்து பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், ஆதித்யா விண்கலத்தில் அறிவியலாளர்கள் பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டனர். ஹாலோ ஆர்பிட் எனப்படும் திட்டமிடப்பட்ட பகுதியில் ஆதித்யா எல்-1 விண்கலத்தை நிலைநிறுத்துவது மட்டுமே இன்றைய நிகழ்வு.

சரியான இடத்தில் நிலைநிறுத்துவதற்காக விண்கலத்தின் விசையை 31 மீட்டர்/ விநாடியாக குறைக்கப்பட்டது. இவ்வாறு பல்வேறு திருத்தங்களுக்குப் பிறகு ஆதித்யா எல்-1 திட்டமிட்டபடி இலக்கை அடைந்தது.

அறிவியல் அறிஞர்கள் இன்று மாற்றங்களை செய்யவில்லை என்றால், ஆதித்யா எல்-1 இலக்கிலிருந்து விலகியிருக்கும். தற்போது துல்லியமாக நிலைநிறுத்தப்பட்டது. எனினும், அடுத்த சில மணி நேரங்களுக்கு ஆதித்யா எல்-1 விண்கலம் கண்காணிப்பிலேயே இருக்கும்.

ஏதேனும் மாற்றங்கள் இருந்தால், அதனை சரிசெய்ய முயற்சிப்போம். ஆனால் அப்படி ஏதும் நடக்கக்கூடாது என்றே கருதுகிறேன். ஆதித்யா எல்-1 இந்தியாவுக்கானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த உலகத்துக்கானது. இதன் அறிவியல் முக்கியத்தை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com