6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

போக்சோ வழக்கு: சிறுமியின் குடும்பத்தாரைத் தாக்கிய மர்ம நபர்

சிறுமி பாலியல் வழக்கில் விடுவிக்கப்பட்ட நபரின் உறவினர் இந்தச் செயலைச் செய்துள்ளார்.

News image
Updated On :6 ஜனவரி 2024, 8:04 am

DIN

இடுக்கி: வண்டிப்பெரியாறு சிறுமி பாலியல் மற்றும் கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட இளைஞரின் உறவினர் பாதிக்கப்பட்ட குடும்பத்தாரைத் தாக்க முயன்ற சம்பவம் சனிக்கிழமை நிகழ்ந்துள்ளது.

உயிரிழந்த சிறுமியின் தந்தை மற்றும் தாத்தாவை குற்றம் சாட்டப்பட்ட அர்ஜுனின் உறவினர் கூரான பொருளால் குத்த முயற்சி செய்துள்ளார்.

இந்தச் சம்பவம் காலை 11:30 மணிக்கு நடந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தாக்க முயன்றவர் சம்பவ இடத்திலிருந்து தப்பிவிட்டார்.

போக்சோ நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவரின் மீதான குற்றத்திற்கான சாட்சியம் அல்லது அவர் நிரபாரதி என்பதற்கு எதிரான சாட்சியங்களை நிறுவ புகார் தரப்பு தவறியதால் அவரை விடுவிக்க டிச.14 உத்தரவிட்டது.

இந்த நிலையில், கேரள உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் மாநில அரசின் மேல்முறையீட்டை ஏற்றுக் கொண்டுள்ளது.

ஜுன் 30, 2021 அன்று ஆறு வயதான சிறுமி வீட்டில் தூக்கில் தொங்கிய சம்பவம் முதலில் வழக்கத்துக்கு மாறான இறப்பாக பதிவு செய்யப்பட்டது. உடற்கூராய்வு, சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பதை உறுதி செய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.