கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

யானை பலி... சேதமடைந்த ரயில் இன்ஜின்

ரயில் மீது யானைகள் மோதி பலியாகிற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்துவருகின்றன.

News image

மாதிரி படம்

Updated On :7 ஜனவரி 2024, 6:41 am

அஸ்ஸாம் மாநிலம் ஜோர்கட் பகுதியில் ரயில் மோதி யானை பலியாகியுள்ளது. 

கிப்பான் வனஉயிரின காப்பகத்தில் இந்தச் சம்பவம் சனிக்கிழமை இரவு நிகழ்ந்துள்ளது. யானைகள் கூட்டமாக ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயிலில் மோதி ஒரு யானை பலியாகியுள்ளது.

”யானை மீது ரயில் இன்ஜின் மோதியது. யானையைத் தாக்கியதால் இன்ஜினில் சில இயந்திரக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளன” என அதிகாரி தெரிவித்துள்ளார்.

யானை மீது மோதிய ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டது. யானையின் உடல் காலையில் அப்புறப்படுத்தப்பட்ட பிறகே விவேக் எக்ஸ்பிரஸ் அங்கிருந்து சென்றுள்ளது.

வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்த பிறகு உடற்கூராய்வு செய்யப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.