தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

நாட்டில் 682 ஆக உயர்ந்த ஜெ.என்.1 வகை கரோனா பாதிப்பு! 

நாடு முழுவதும் உள்ள 12 மாநிலங்களில் ஜெ.என்.1 வகை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 682 ஆக அதிகரித்துள்ளது. 

News image
கோப்புப் படம்.
Updated On :8 ஜனவரி 2024, 12:22 pm

DIN

நாடு முழுவதும் உள்ள 12 மாநிலங்களில் ஜெ.என்.1 வகை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 682 ஆக அதிகரித்துள்ளது. 

கர்நாடகத்தில் 199, கேரளத்தில் 148, மகாராஷ்டிரத்தில் 139, கோவாவில் 47, குஜராத்தில் 36, ஆந்திரம் மற்றும் ராஜஸ்தானில் 30, தமிழகத்தில் 26, புது தில்லியில் 21, ஒடிசாவில் 3, தெலங்கானா மற்றும் ஹரியாணாவில் தலா ஒரு பாதிப்பும் பதிவாகியுள்ளது. 

கடந்த டிசம்பரில் 1339 மாதிரிகளும், ஜனவரியில் 65 மாதிரிகளும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

கரோனா திரிபு குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாக கவனித்து வருகின்றன. ஜெ.என்.1 வகை கரோனாவின் ஆபத்து குறைவாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் 605 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளது. கரோனா சிகிச்சையில் 4,002 பேர் உள்ளனர். ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 4,50,18,792 ஆக உள்ளது. 

கேரளத்தில் 2, கர்நடாகம் மற்றும் திரிபுராவில் தலா ஒன்று என 4 பேர் இறந்துள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 5,3,396 ஆக உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.