
புதுதில்லி: நாட்டின் நிலக்கரி இறக்குமதி நவம்பர் மாதத்தில் 11.7 சதவிகிதம் அதிகரித்து 20.95 லட்சம் டன்னாக உள்ளது. அதே வேளையில் 2022 நவம்பரில் நாட்டின் நிலக்கரி இறக்குமதி 187.5 லட்சம் டன்னாக இருந்தது என்று பி2பி இ-காமர்ஸ் நிறுவனமான எம்ஜங்க்ஷன் சர்வீசஸ் தெரிவித்துள்ளது.
இருப்பினும், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் நிலக்கரி இறக்குமதி 1,734.7 லட்சம் டன்னிலிருந்து 1,690.800 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. அக்டோபரில் பண்டிகை காலத்திற்குப் பிறகு, உள்நாட்டு விநியோகம் மற்றும் தேவையில் ஏற்பட்ட மந்தநிலை காரணமாக நிலக்கரி இறக்குமதி குறைந்துள்ளது என்று தலைமை நிர்வாக அதிகாரி வினயா வர்மா தெரிவித்தார். இந்நிலையில் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரிக்கான தேவை வரும் மாதங்களில் குறைய வாய்ப்புள்ளது.
2023 நவம்பரில் மொத்த இறக்குமதியில், கோக்கிங் அல்லாத நிலக்கரி இறக்குமதி 14.37 மெட்ரிக் டன்னாக இருந்தது, இது முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் 11.88 மெட்ரிக் டன்னாக இருந்தது.
2023ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையான காலகட்டத்தில், கோக்கிங் அல்லாத நிலக்கரி இறக்குமதி 1,089 லட்சம் டன்னாக இருந்தது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இறக்குமதி செய்யப்பட்ட 1,162.8 லட்சம் டன்னை விட குறைவாகும்.
ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் கோக்கிங் நிலக்கரி இறக்குமதியானது 37.97 மெட்ரிக் டன்னாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.