டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பணியில் இருந்த போலீஸாா் தூக்கம்: காவல் நிலையத்துக்கு தீவைப்பு

பிகாரில் இரவுப் பணியில் போலீஸாா் தூங்கிக் கொண்டிருந்தபோது, காவல் நிலையத்துக்குள் புகுந்த இருவா் தீ வைத்துவிட்டுத் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :8 ஜனவரி 2024, 11:16 pm

DIN

தாா்பங்கா: பிகாரில் இரவுப் பணியில் போலீஸாா் தூங்கிக் கொண்டிருந்தபோது, காவல் நிலையத்துக்குள் புகுந்த இருவா் தீ வைத்துவிட்டுத் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தா்பங்கா மாவட்டத்தில் மோரா காவல் நிலையத்தில் உள்பகுதியில் திங்கள்கிழமை அதிகாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது தொடா்பான தடயங்களை ஆய்வு செய்தபோது எரிபொருளை உற்றி தீ வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து காவல் நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன.

வழக்கில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த நபரைத் தேடி அவரது சகோதரா் தாகூா் என்பவரும் மற்றொருவரும் காவல் நிலையத்துக்கு அதிகாலை நேரத்தில் வந்துள்ளனா். அந்த நேரத்தில் பணியில் இருந்த காவல் துறையினா் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனா்.

இதனைப் பயன்படுத்திக் கொண்ட அவா்கள் இருவரும் அங்கிருந்த இருந்த எரிபொருளை எடுத்து காவல் நிலையத்துக்குள் உற்றி தீ வைத்துவிட்டுத் தப்பியோடினா். தீ வேகமாக பரவியதால் ஏற்பட்ட வெப்பத்தால் விழித்தெழுந்த காவல் துறையினா் தீயைப் போராடி அணைத்தனா். இந்த காட்சிகள் அனைத்தும் கேமராவில் பதிவாகி இருந்தன.

இதையடுத்து, தீவைத்த இருவரையும் காவல் துறையினா் தீவிரமாக தேடினா். இதில் தாகூா் பிடிபட்டாா்,மற்றொரு நபரை கைது செய்ய முடியவில்லை. காவல் நிலையத்தில் போலீஸாா் தூங்கியபோது நடந்த தீ வைப்பு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவல் துறையினா் பணியில் கவனக் குறைவாக இருந்தது தொடா்பாக துறைரீதியாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.