ராமர் கோயில் திறப்பு விழாவின் மூலம் பாஜக வித்தை காட்டிவருகிறது: மம்தா பானர்ஜி!

மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக ராமர் கோயில் தொடக்க விழாவின் மூலம் பாஜக வித்தை காட்டி வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.
மம்தா பானர்ஜி (கோப்புப்படம்)
மம்தா பானர்ஜி (கோப்புப்படம்)

மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக ராமர் கோயில் தொடக்க விழாவின் மூலம் பாஜக வித்தை காட்டி வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ஜாய்நகரில் ஒரு பொது நிகழ்ச்சியில் செவ்வாய்க்கிழமை திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி, உரையாற்றினார்.

அவர் பேசியதாவது: "மக்களை மத அடிப்படையில் பிரிப்பதில் நம்பிக்கை இல்லை. அனைத்து சமூகத்தினரையும் ஒன்றிணைத்து ஒற்றுமையைப் பற்றி பேசும் பண்டிகைகளை நான் நம்புகிறேன்.

நீதிமன்ற உத்தரவின் பேரில் பாஜக ராமர் கோயில் திறப்பு விழாவினை நடத்துகிறது. ஆனால் மக்களவைத் தேர்தலுக்கு முன்பு அதை ஒரு வித்தையாகச் செய்து வருகிறது. மற்ற சமூகங்களை ஒதுக்கி வைக்கும் விழாக்களை நான் ஆதரிப்பதில்லை" என்று தெரிவித்தார்.

உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் ஜனவரி 22ம் தேதி திறக்கப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் 6,000 க்கும் மேற்பட்டோர் இந்த தொடக்க விழாவில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com