இந்து புராணப் பெயர்களைக் குழந்தைகளுக்கு வைக்க வேண்டும்: அயோத்தி தீர்த்தர்

கோயிலைக் கட்டுவதை விட அதனை பராமரிப்பதே பெரிய பணி என மூத்த அறக்கட்டளை உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
இந்து புராணப் பெயர்களைக் குழந்தைகளுக்கு  வைக்க வேண்டும்: அயோத்தி தீர்த்தர்

அயோத்தி ராமர் கோயில் மூலவர் பிரதிஷ்டை நிகழ்வையொட்டி அறக்கட்டளையின் மூத்த உறுப்பினர், இந்து புராணங்களில் இருந்து குழந்தைகளுக்கு பெயர் வைக்குமாறும் கலாச்சாரத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்லவும் வலியுறுத்தியுள்ளார்.

சுவாமி விஷ்வபிரசன்ன தீர்த்தர், அறக்கட்டளையின் உறுப்பினர் பேசும்போது கோயிலைக் கட்டுவதை விட அதனை பராமரிப்பதே பெரிய பணி எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

நூற்றாண்டாக கண்ட கனவு நிறைவேறியுள்ளது. ஆனால் அதனால் பொறுப்பு முடிந்துவிடவில்லை. கோயிலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது இருக்க நாம் சிந்திக்க வேண்டும். நமது குழந்தைகள் இந்துக்களாக இருக்கும்வரை இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும்வரை இந்தக் கோயில் அப்படியே இருக்கும். ஆப்கானிஸ்தானில் புத்தர் சிலைகளுக்கு என்னவானது எனப் பார்க்க வேண்டும் எனப் பேசியுள்ளார்.

மேலும், இந்து புராணங்கள், இதிகாசங்களில் இருந்து குழந்தைகளுக்குப் பெயர் வைக்கவேண்டும் எனவும் கலாச்சாரத்தை தலைமுறைகளுக்குக் கடத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

மூலவர் பிரதிஷ்டை நிகழ்வுக்குப் பிறகு 48 நாள்கள் மண்டல பூஜை நடக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அயோத்தி, கலியுகத்தில் (நவீன யுகம்) இருந்து திரேத யுகத்துக்கு (ராமர் யுகம்) மாறியுள்ளதாக அவர் கோயில் திறப்பு விழாவைக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com