
நாட்டில் இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 605 பேருக்கு இத்தொற்று உறுதி செய்யப்பட்டது.
கரோனா குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தினசரி தரவுகள் வெளியிட்டு வருகின்றது. அதன்படி, கரோனா பாதிப்பு காரணமாக கேரளம் மற்றும் கர்நாடகத்தில் தலா 2 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 605 பேர் பதிவாகியுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 4,50,15,819 ஆகவும், பலி 5,3,406 ஆகயும் பதிவாகியுள்ளது.
புதிய வகை கரோனா பரவல் மற்றும் குளிா்காலம் எதிரொலியாக, நாட்டில் கடந்த மாத தொடக்கத்தில் இருந்து கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வந்த நிலையில், இரண்டு நாள்களாக மீண்டும் குறைந்து வருகின்றது. கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 3,919-ஆக உயா்ந்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 220.67 கோடி தவணை கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சக தரவுகளில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.