வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

உ.பி.யில் மாணவனை தாக்கிய தலைமைக் காவலர் கைது!

உத்தரப் பிரதேசத்தின், கான்பூரில் மாணவனைத் தாக்கி, சிறுநீர் குடிக்கவைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

News image
கோப்புப் படம்.
Updated On :10 ஜனவரி 2024, 11:14 am

DIN

உத்தரப் பிரதேசத்தின், கான்பூரில் மாணவனைத் தாக்கி, சிறுநீர் குடிக்கவைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

முதுகலை பட்டதாரி மாணவன் ஆயுஷ் திவேதி(23). சிவில் லைன்ஸ் பகுதியில்  நண்பரை சந்திப்பதற்காக வந்த இவரை ஒரு கும்பல் கடத்திச் சென்றுள்ளனர். 

கடத்திச் சென்ற மாணவன் கூப்பர்கஞ்ச் அருகே உள்ள ரயில் தண்டவாளத்திற்கு அழைத்துச் சென்று தாக்கியதாகவும், பயமுறுத்தும் வகையில் துப்பாக்கியால் சுட்டதாகவும், பின்னர் கடத்திச்சென்ற கும்பல் ஒவ்வொருர் பின் ஒருவராக மாணவனின் வாயில் சிறுநீர் கழித்ததாகவும் கூறப்படுகிறது. 

இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர் உள்ளூர் புலனாய்வுப் பிரிவில் உள்ள தலைமைக் காவலர் தர்மேந்திர யாதவ் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, தலைமைக் காவலர் உள்பட மூவரை குற்றப்பிரிவு இணை ஆணையர் நிலப்ஜா சௌத்ரி கைது செய்துள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.