அருணாச்சலப் பிரதேசத்துக்கு சென்ற ஜெ.பி.நட்டா ஏன் மணிப்பூரை பற்றி பேசவில்லை: ஆதிர் ரஞ்சன் கேள்வி

அருணாச்சலப் பிரதேசத்துக்கு சென்ற பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா ஏன் அருகில் உள்ள மாநிலமான மணிப்பூரை பற்றி பேசவில்லை என்று ஆதிர் ரஞ்சன் சௌத்ரி கேள்வி எழுப்பினார்.
ஆதிர் ரஞ்சன் சௌத்ரி (கோப்புப்படம்)
ஆதிர் ரஞ்சன் சௌத்ரி (கோப்புப்படம்)

அருணாச்சலப் பிரதேசத்துக்கு சென்ற பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா ஏன் அருகில் உள்ள மாநிலமான மணிப்பூரை பற்றி பேசவில்லை என்று ஆதிர் ரஞ்சன் சௌத்ரி கேள்வி எழுப்பினார்.

அருணாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான இட்டா நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பாஜகவின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கலந்துகொண்டு பேசினார். 

இதனைக் குறிப்பிட்டு பேசிய காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, “காங்கிரஸ் குறித்து பேசாமல் பாஜக தலைவர்களால் உறங்க முடியாது. எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைத்து அமலாக்கத் துறை செயல்பட்டு வருகிறது. மத்திய பாஜக அரசின் விருப்பத்திற்கிணங்க அமலாக்கத்துறை இயங்கி வருகின்றது. 

அருணாச்சலப் பிரதேசத்திற்கு சென்றுள்ள பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா அதன் அருகிலுள்ள மணிப்பூரை பற்றி ஏன் எதுவும் பேசவில்லை? பாஜகவின் தலைவராக அவர் மணிப்பூர் வன்முறையைப் பற்றி பேசியிருக்க வேண்டும். ஆனால் அவர் ஏன் அமைதியாக இருந்தார்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

முன்னதாக, அருணாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஜெ.பி.நட்டா காங்கிரஸ் பிரித்தாளும் கொள்கையை பின்பற்றி வருவதாக கூறினார். 

கடந்த ஆண்டு மே மாதம் முதல் மணிப்பூரில் குக்கி மற்றும் மெய்தி ஆகிய இரு இனக்குழுக்களுக்கு இடையே வன்முறை நீடித்து வருகிறது. மணிப்பூரில் பிரேன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com