ஹிமாச்சலப் பிரதேசம் முழுவதும் கடும் உறைபனிப் பொழிவு!

ஹிமாச்சலப் பிரதேசம் முழுவதும் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 முதல் 10 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்த நிலையில் இன்று திடீரென்று 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை குறைந்தது.
ஹிமாச்சலப் பிரதேசம் முழுவதும் கடும் உறைபனிப் பொழிவு!

சிம்லா: ஹிமாச்சலப் பிரதேசம் முழுவதும் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 முதல் 10 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்த நிலையில் இன்று திடீரென்று 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை குறைந்தது.

மாநிலத்தில் வானிலை வறண்டதாகவே இருந்தது போதிலும், வானிலை ஆய்வு மையம் ஜனவரி 16 மற்றும் 17ஆம் தேதிகளில் மலை பகுதிகளில் லேசான மழை அல்லது பனி பொழியும் என்று கணித்துள்ள நிலையில், அடுத்த இரண்டு நாள்களுக்கு மண்டி, பிலாஸ்பூர், ஹமீர்பூர், உனா, காங்க்ரா, சிர்மௌர் மற்றும் சோலன் ஆகிய மாவட்டங்களின் காலை வேளையில் அடர்த்தியான மூடுபனி ஏற்படக்கூடும் என்று எச்சரித்துள்ளது.

லாஹவுல் மற்றும் ஸ்பிட்டி மாவட்டத்தில் உள்ள குகும்சேரியின் குறைந்தபட்ச வெப்பநிலை நேற்று 0.9 டிகிரி செல்சியஸாக உயர்ந்தது. இது இந்த ஆண்டின் வழக்கத்தை விட 10.3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்த போதிலும், திடீரென்று மைனஸ் 7.2 டிகிரி செல்சியஸாகக் குறைந்தது.

தரம்சாலா மற்றும் சிம்லாவில் நேற்று (சனிக்கிழமை) குறைந்தபட்ச வெப்பநிலை 9.2 டிகிரி செல்சியஸ் மற்றும் 9 டிகிரி செல்சியஸாக பதிவான நிலையில் இன்று குறைந்தபட்சமாக 7.5 டிகிரி செல்சியஸ் மற்றும் 6.2 டிகிரி செல்சியஸ் பதிவானது.

லாஹவுல் மற்றும் ஸ்பிட்டி மாவட்டத்தில் இன்று குறைந்தபட்ச வெப்பநிலை 0.2 டிகிரி செல்சியஸாக பதிவான நிலையில், சம்பாவில் அதிகபட்சமாக 22.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், சிம்லா மற்றும் தர்மசாலாவில் முறையே 17 மற்றும் 20.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com