மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

இண்டிகோ விமானியைத் தாக்கிய பயணி..! என்ன நடந்தது?

தில்லியில் இண்டிகோ விமானத்தின் விமானியைப் பயணி ஒருவர் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

News image
Updated On :15 ஜனவரி 2024, 6:04 am

தில்லியில் ஏற்பட கடும் பனி மூட்டம் காரணமாக நேற்று (ஜன.14) 150க்கும் மேற்பட்ட விமானங்கள் பல மணிநேர தாமத்துக்குப் பின்பே இயக்கப்பட்டன. சென்னை, பெங்களூரு, கேரளத்திலிருந்து கிளம்பும் விமானங்களும் பனியால் திட்டமிட்ட நேரத்திற்கு இயக்க முடியாமல் பாதிக்கப்பட்டன. 

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணிக்கு தில்லியிலிருந்து கோவா செல்லவேண்டிய இண்டிகோ விமானம் சில மணி நேரமாகக் கிளம்பாமல் இருந்தது. இதனால், குழப்பமடைந்த பயணிகளிடம்  விமானி, வானில் நிலவும் பனி மூட்டத்தால் விமானம் தாமதமாகவே புறப்படும் எனக் கூறினார். 

அப்போது, பின் இருக்கையில் அமர்ந்திருந்த பயணி ஒருவர், ‘பொய் சொல்லாத’ என்றபடி வேகமாக விமானியை நெருங்கி அவரை அடிக்கத் துவங்கினார். இதனால், அதிர்ச்சியடைந்த சக பயணிகள் கூச்சலிட்டனர். 

தாக்குதலில் ஈடுப்பட்ட பயணியைச் சிலர் தடுத்து அமைதிப்படுத்தினர். விமானியை அடித்த பயணியின் பெயர் சஹில் கத்தாரியா எனத் தெரிய வந்துள்ளது. 

நடிகை ராதிகா ஆப்தே உள்பட பலர் விமான தாமதம் காரணமாக பாதிக்கப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.