கடும் பனிமூட்டத்தால் தில்லியில் 50-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிப்படைந்துள்ளது.
தலைநகர் தில்லியில் செவ்வாய்கிழமை நிலவிய கடுமையான பனி மூட்டம் காரணமாக, இந்திரா காந்தி சர்வதேச (ஐஜிஐ) விமான நிலையத்திலிருந்து புறப்படும் சுமார் 30 விமானங்கள் தாமதமானதாகவும், வானிலை காரணமாக 17 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். .
குறைந்தபட்ச வெப்பநிலையாக 5 டிகிரி செல்சியஸ் பதிவானதாகவும், ஏராளமான பயணிகள் அவர்களது உடைமைகளுடன் விமான நிலையத்தில் காத்திருப்பதைக் காண முடிந்ததாகவும் விமான நிலைய அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
"எனது விமானம் காலை 8:40 மணிக்கு புறப்பட இருந்தது, ஆனால் மோசமான வானிலை காரணமாக காலை 10:30 மணிக்கு புறப்படும் என்று கூறப்பட்டுள்ளது" என்று பயணி ஒருவர் கூறினார்.
இதையும் படிக்க: சமயபுரம் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
இதற்கிடையில், தில்லியில் நிலவிய பனிமூட்டம் மற்றும் குறைந்த பார்வைத் திறன் காரணமாக 30 ரயில்கள் தாமதமாக வந்தடைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜன நாயகன் இணையதளத்தில் வெளியானதற்கு எல். முருகன்தான் பொறுப்பு: கே.ஏ.செங்கோட்டையன்

ராமதாஸிடம் நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!

தன்னை இயேசுவாக சித்திரிக்கும் படத்தை வெளியிட்ட டிரம்ப்!!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


