விமான நிலைய ஓடுதளத்தில் அமர்ந்து சாப்பிட்ட விமான பயணிகள்: மன்னிப்பு கேட்ட இண்டிகோ!

மும்பை விமான நிலைய ஓடுதளத்தில் அமர்ந்து இரவு உணவு சாப்பிட்ட விமான பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுள்ளது இண்டிகோ நிர்வாகம். 
படங்கள்: எக்ஸ்
படங்கள்: எக்ஸ்

தில்லியில் ஏற்பட கடும் பனி மூட்டம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை (ஜன.14) அன்று 150க்கும் மேற்பட்ட விமானங்கள் பல மணிநேர தாமத்துக்குப் பின்பே இயக்கப்பட்டன. சென்னை, பெங்களூரு, கேரளத்திலிருந்து கிளம்பும் விமானங்களும் பனியால் திட்டமிட்ட நேரத்திற்கு இயக்க முடியாமல் பாதிக்கப்பட்டன. 

ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணிக்கு தில்லியிலிருந்து கோவா செல்லவேண்டிய இண்டிகோ விமானம் சில மணி நேரமாகக் கிளம்பாமல் இருந்தது. இதனால் கோபமடைந்த பயணி ஒருவர் விமானியை தாகியுள்ளார்.

பின் மீண்டும் இதே விமானம் கோவாவில் இருந்து தில்லி சென்ற இந்த விமானம் அடர்ந்த மூடுபனி காரணமாக மும்பையில் தரையிறக்கப்பட்டுள்ளது.

மும்பை விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இண்டிகோ 6இ 2195 விமானத்தில் இருந்த பயணிகள் தரையிறங்கிய வேகத்தில் ஓடுதளத்துக்கு அருகில் உள்ள டார்மாக் (விமானங்கள் நிறுத்தும் இடம்) பகுதியில் அமர்ந்தபடி உணவும் உண்டனர். இந்த காட்சி இணையத்தில் விடியோவாக வெளியாகி வைரலானது. இந்தச் சூழலில் இது குறித்து மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் விமான நிலையம் மற்றும் இண்டிகோ விமான நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது.

கோவாவில் இருந்து டெல்லி செல்ல வேண்டிய அந்த விமானம் குறித்த நேரத்தில் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் நிலவிய மூடுபனி காரணமாக மும்பைக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. மும்பையில் விமானத்துடன் படிகள் இணைக்கப்பட்ட நிலையில் பயணிகள் அதில் இருந்து வெளியேறிய நிலையில் ஓடுதளத்துக்கு அருகில் விமானம் நிறுத்தப்பட்ட டார்மாக் பகுதியில் அமர்ந்துள்ளனர். அந்த இடத்துக்கு விரைந்த பாதுகாப்பு அதிகாரிகள் பயணிகளை அங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்கு மாற்ற முயற்சித்துள்ளனர். ஆனால், அதில் தோல்வியை தழுவினர் என விமான நிலைய செய்தித் தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.

மோசமான வானிலை காரணமாக விமானம் திருப்பி விடப்பட்டதாகவும். இதற்கு தங்கள் பயணிகளிடம் இண்டிகோ நிறுவனம் மன்னிப்பு கேட்டுக் கொண்டது. இது மாதிரியான சம்பவங்கள் வரும் நாள்களில் நடக்காமல் பார்த்துக் கொள்வதாகவும். இது குறித்து விசாரித்து வருவதாகவும் இண்டிகோ தெரிவித்துள்ளது. இந்த விமானம் சுமார் 12 மணி நேரம் தாமதம் ஆனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com