அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை: பணச் சந்தைகள் திறக்கப்படும் நேரத்தில் மாற்றம்!

அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜனவரி 22ஆம் தேதி காலை 9 மணிக்கு பதிலாக பிற்பகல் 2.30 மணிக்கு பணச் சந்தைகள் திறக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி இன்று தெரிவித்துள்ளது.
அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை: பணச் சந்தைகள் திறக்கப்படும் நேரத்தில் மாற்றம்!

மும்பை: அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜனவரி 22ஆம் தேதி காலை 9 மணிக்கு பதிலாக பிற்பகல் 2.30 மணிக்கு பணச் சந்தைகள் திறக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி இன்று தெரிவித்துள்ளது.

மத்திய அரசு அறிவித்த ஜனவரி 22 ஆம் தேதி அரை நாள் விடுமுறையை கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கியால் ஒழுங்குபடுத்தப்பட்ட பல்வேறு சந்தைகளுக்கான வர்த்தக நேரங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்று தனது சுற்றறிக்கையில் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 19, 2024 அன்று ஏலம் விடப்பட்ட இந்திய அரசின் பத்திரங்கள், அனைத்து செட்டில்மென்ட், ஜனவரி 22, 2024 அன்று சந்தை வர்த்தக நேரமான மதியம் 2:30 மணிக்குத் தொடங்கிய பிறகு நடைபெறும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஜனவரி 23 முதல் வழக்கமான வர்த்தக நேரத்திற்கு வர்த்தகம் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 

நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் கிராமப்புற வங்கிகள் ஜனவரி 22ஆம் தேதியன்று அரை நாள் விடுமுறை விடப்படும்.

மற்றொரு சுற்றறிக்கையில் அரசு அறிவித்த அரை நாள் விடுமுறை காரணமாக ரிசர்வ் வங்கியின் அலுவலகங்களில் ஜனவரி 22ஆம் தேதியன்று ரூ.2,000 நோட்டுகளை மாற்றுதல் மற்றும் டெபாசிட் செய்யும் வசதி இருக்காது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த வசதியானது ஜனவரி 23ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com