மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ராமர் கோயில்: குஜராத்தில் அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை! 

குஜராத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் ஜனவரி 22-ம் அன்று அரை நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். 

News image

கோப்புப் படம்

Updated On :19 ஜனவரி 2024, 6:25 am

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் வரும் 22-ம் தேதி நடைபெறும் சிலை பிரதிஷ்டை நாளில், குஜராத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் ஜனவரி 22-ம் அன்று அரை நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். 

ஊழியர்களின் ஆன்மிக உணர்வு மற்றும் அவர்களின் கோரிக்கைகள் காரணமாக, ராமர் கோயில் பிரான் பிரதிஷ்டையை முன்னிட்டு ஜனவரி 22-ம் தேதி மதியம் 2.30 மணி வரை அரை நாள் விடுமுறை விடப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. 

இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் கண்காணிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஜனவரி 22ஆம் தேதி அனைத்து ஊழியர்களுக்கும் அரை நாள் விடுமுறை என மத்திய அரசு வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.