வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

மருத்துவ இணையர் பலி: கடன் சுமை காரணமா?

கணவன் மற்றும் மனைவி கடன் சுமை காரணமாக உயிரிழந்திருக்கலாம் என காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

News image
Updated On :20 ஜனவரி 2024, 8:59 am

DIN

சாகர்: மத்திய பிரதேசம் சாகர் மாவட்டத்தில் சனிக்கிழமை மருத்துவர் இணையர் தற்கொலை செய்துள்ளனர், கடன் சுமையால் அவர்கள் இறந்ததாக காவலர்கள் தெரிவித்தனர்.

பால்பிர் மற்றும் மஞ்சு, மாவட்ட தலைமையகத்தில் இருந்து 70 கிமீ தொலைவில் உள்ள பினா நகரத்தில் உள்ள அவர்களது வீட்டில் இறந்த நிலையில் கண்டறியப்பட்டதாக பினா காவல் நிலைய பொறுப்பாளர் பாரத் சிங் தாகூர் தெரிவித்துள்ளார்.

நகரத்துக்கு வெளியே தங்கிப் படிக்கும் இணையரின் மகன், காலை வீட்டுக்கு திரும்பும் போது பெற்றோரை உயிரிழந்த நிலையில் பார்த்துள்ளார்.

பல்பீர் மின்விசிறியில் தூக்கிட்டு இறந்ததாகவும் அவரது மனைவி படுக்கையில் இறந்து கிடந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

முதல்கட்ட ஆய்வில், மனைவி விஷம் அருந்தியோ அல்லது ஊசி செலுத்தி கொண்டே இறந்திருக்கலாம் எனத் தெரிகிறது.

தற்கொலை குறிப்பு அந்த அறையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள கடன் குறித்து இருவரும் கவலையில் இருந்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருவரும் அரசு சுகாதார துறையில் பணிபுரியும் மருத்துவர்கள். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.