குடும்பத் தகராறில் குழந்தையை கிணற்றில் வீசிய பாட்டி!

உத்தரப் பிரதேசத்தில் 10 வயது குழந்தையைக் கிணற்றில் வீசிக்கொலை செய்த பாட்டியைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர். 
கோப்புப்படம்.
கோப்புப்படம்.


உத்தரப் பிரதேசத்தில் 10 வயது குழந்தையை அவரது பாட்டி கிணற்றில் வீசிக் கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. சுல்தான்பூர் மாவட்டத்தில் உள்ள நோன்ரா கிராமத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பத்து வயதான ரியா எனும் பெண் குழந்தையை குடும்பப் பிரச்னையால் கிணற்றில் வீசிக் கொலை செய்த பாட்டியைத் தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

கிணற்றில் வீசப்பட்ட குழந்தையை அப்பகுதி மக்கள் மீட்டு அருகிலுள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். 

குழந்தையின் உடல் உடற்கூராய்விற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், 50 வயதான பாட்டி சுதாமா தலைமறைவாகியிருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com