ஜன.22 அயோத்தி கோயில் நேரலையை ஒளிபரப்ப தமிழக அரசு தடைவிதித்திருப்பது கண்டனத்துக்குரியது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமா் கோயிலில் மூலவா் குழந்தை ராமா் சிலை பிரதிஷ்டை வரும் திங்கள்கிழமை நடைபெறுகிறது. இந்த கோலாகல நிகழ்வில் பிரதமா் நரேந்திர மோடி உள்பட 8,000-க்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினா்கள் பங்கேற்க உள்ளனா்.
இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் ஜன.22 அயோத்தி கோயில் நேரலையை ஒளிபரப்ப தமிழக அரசு தடைவிதித்திருப்பது கண்டனத்துக்குரியது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ஜன.22 அயோத்தி கோயில் நேரலையை ஒளிபரப்ப தமிழக அரசு தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் ஸ்ரீராமருக்கு 200க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. அறநிலையத்துறையின் கீழுள்ள கோயில்களில் ராமர் பெயரில் பூஜை நடத்த நாளை அனுமதிக்கப்படவில்லை. தனியாருக்கு சொந்தமான கோயில்களில் நிகழ்ச்சிகளை நடத்துவதையும் காவல்துறையினர் தடுத்து வருகின்றனர்.
பந்தல்களை அகற்றுவோம் என ஏற்பாட்டாளர்களை காவல்துறை மிரட்டுகிறது. இந்து விரோத, வெறுப்பு நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் கோயில்களில் நாளை ராமர் பெயரில் பூஜை நடத்த தடை என்ற தகவலுக்கு இந்து சமய அறிநிலையத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
அன்னதானம் உள்ளிட்ட வழக்கமான நிகழ்வுகளுக்கு கோயில்களில் நாளை கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை என்றும் விளக்கமளித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் மோடி தலைமையில் பாஜக மையக்குழு கூட்டம்! அண்ணாமலை பங்கேற்பு!

சிஎஸ்கே அணியின் கேப்டன், தலைமைப் பயிற்சியாளர் பதவி விலகுவார்களா?

சிதம்பரம் அருகே சாலை விபத்தில் தலைமை காவலர் பலி

6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


