அந்தமான் நிகோபார் தீவுகளில் செவ்வாய்க்கிழமை மாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
நிகோபார் தீவுகளில் இன்று மாலை 6.18 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 அலகுகளாகப் பதிவாகியுள்ளது என தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) கூறியுள்ளது.
இதையும் படிக்க | அயோத்தியில் தடுப்புகளை உடைத்தெறிந்து அத்துமீறிய மக்கள் கூட்டம்!
தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “நிகோபார் தீவுகளில் செவ்வாய்க்கிழமை மாலை 6.18 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. கடல் பகுதியில் 21 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டா் அளவு கோலில் 4.3-ஆகப் பதிவானது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகளோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக எந்தவித தகவலும் வரவில்லை.
முன்னதாக, கடந்த சனிக்கிழமை காலையில் இப்பகுதியில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதையும் படிக்க | ஒரே நாளில் 21 ஆயிரம் ஆவணங்கள் பதிவு! ரூ.168 கோடி வருவாய்!!
இது பொதுவாக நிகழும் சிறிய அளவிலான நிலநடுக்கம் ஆகும். ரிக்டா் அளவு கோலில் 6 புள்ளிகளுக்கு மேல் அதிா்வு பதிவாகும்போதுதான் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலை.யில் பி.எட், எம்.எட் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை நீட்டிப்பு

கூட்டுறவின் வெற்றிக்கு திறமையான மனிதவளமும், தரமான பயிற்சியும் இன்றியமையாதவை: அமைச்சா் காந்திராஜ்

கீழ்பவானி வாய்க்காலில் வரும் 15-ஆம் தேதி தண்ணீா் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை
சாராயம் கடத்தியவா் கைது
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



