29வது மாடியிலிருந்து குதித்த 12 வயது சிறுமி
பெங்களூருவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் 29வது மாடியிலிருந்து சிறுமி குதித்துத் தற்கொலை செய்துகொண்டார்.


பெங்களூருவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் 29வது மாடியிலிருந்து 12 வயது சிறுமி குதித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தென்கிழக்கு பெங்களூருவின் ஹுலிமாவு பகுதியில், பேகுர் சாலையில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வாழ்ந்து வந்த 7ஆம் வகுப்பு மாணவி, திடீரென தனது வீட்டின் பால்கனியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணியளவில், குடியிருப்பு வளாகத்தில் பயங்கர சப்தம் கேட்டதால், காவலாளி அங்கேச் சென்று பார்த்தபோதுதான் சம்பவம் தெரிய வந்தது. பிறகு, அந்தக் குடியிருப்பில் வசித்து வந்தவர்கள் கீழே வந்து பார்த்தபோதுதான் அந்த சிறுமி யார் என்று அடையாளம் தெரிய வந்துள்ளது.
உடனடியாக குடியிருப்பு நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் மூலம் காவல்துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கினர்.
அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வரும் சிறுமியின் தந்தை மென்பொருள் பொறியாளர் என்பதும், அவருக்கு 6 மாதங்களுக்கு முன்பு வேலை போனதும், தாய் வீட்டைக் கவனித்து வருபவர் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அவர் தற்கொலைக்கு முன் எந்தக் கடிதமும் எழுதிவைத்திருக்கவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவரது செல்ஃபோன் உள்ளிட்டவை ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டுள்ளது. தாயிடம் விசாரித்த போது, மகளை காலை 4.40 மணிக்கு பார்த்ததாகவும், ஏன் இவ்வளவு சீக்கிரம் எழுந்துவிட்டாய் என்று மகளிடம் கேட்டபோது, அதற்கு அவர் கோபமாக பதிலளித்துவிட்டு அவளது அறைக்குச் சென்றுவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...