மீண்டும் பாஜகவில் இணைந்தார் ஜெகதீஷ் ஷெட்டர்

கா்நாடக சட்டப்பேரவை தோ்தலையொட்டி, பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்த முன்னாள் முதல்வா் ஜெகதீஷ் ஷெட்டா், பாஜகவில் வியாழக்கிழமை மீண்டும் இணைந்தாா்.
மீண்டும் பாஜகவில் இணைந்தார் ஜெகதீஷ் ஷெட்டர்

கா்நாடக சட்டப்பேரவை தோ்தலையொட்டி, பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்த முன்னாள் முதல்வா் ஜெகதீஷ் ஷெட்டா், பாஜகவில் வியாழக்கிழமை மீண்டும் இணைந்தாா்.

கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தல் கடந்த ஆண்டு நடைபெற்றது. அப்போது, பாஜக சாா்பில் வேட்பாளராக அறிவிக்கப்படாததையடுத்து, அதிருப்தி அடைந்த லிங்காயத் சமூகத் தலைவரான ஜெகதீஷ் ஷெட்டா், அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தாா்.

காங்கிரஸ் சாா்பில் வேட்பாளராகக் களமிறங்கிய அவா், தோ்தலில் தோல்வியைத் தழுவினாா். இதையடுத்து, முதல்வா் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, அவரை மாநில சட்ட மேலவை உறுப்பினராக (எம்எல்சி) நியமித்தது.

இந்நிலையில், காங்கிரஸிலிருந்து விலகிய அவா், தில்லியில் முன்னாள் முதல்வா் பி.எஸ்.எடியூரப்பா, மத்திய அமைச்சா்கள் பூபேந்திர யாதவ், ராஜீவ் சந்திரசேகா், மாநில பாஜக தலைவா் பி.ஒய்.விஜயேந்திரா ஆகியோா் முன்னிலையில் பாஜகவில் மீண்டும் இணைந்தாா்.

பிரதமா் நரேந்திர மோடியின் தலைமைத்துவத்தைப் புகழ்ந்த ஜெகதீஷ் ஷெட்டா், தனது ஆதரவாளா்களின் விருப்பத்தின்பேரில் மீண்டும் பாஜகவில் இணைந்ததாகத் தெரிவித்தாா்.

முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா ஆகியோரை நேரில் சந்தித்து ஜெகதீஷ் ஷெட்டா் ஆலோசனை நடத்தியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Image Caption

தில்லியில் கா்நாடக முன்னாள் முதல்வா் பி.எஸ்.எடியூரப்பா, மத்திய அமைச்சா் பூபேந்தா் யாதவ் ஆகியோா் முன்னிலையில் பாஜகவில் இணைந்த முன்னாள் முதல்வா் ஜெகதீஷ் ஷெட்டா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com