28 மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றி பெறுவதை உறுதி செய்ய வேண்டும்: எடியூரப்பா

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 28 மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றி பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் உள்ள அரண்மனை மைதானத்தில் நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில் பேசிய அவர்,  வரும் மக்களவைத் தேர்தல் நம் அனைவருக்கும் விஷப்பரீட்சை. 2019-ல் 26 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். இந்த முறை 28 மக்களவையிலும் வெற்றியை உறுதி செய்ய வேண்டும். காங்கிரஸில் நிலவும் உட்கட்சி பூசலால் அரசு சீர்குலைந்துள்ளது. 

மாநிலத்தில் ஊழல் மலிந்து விட்டது, எந்த வளர்ச்சியும் நடக்கவில்லை. இருப்பினும் அவர்கள் சதி செய்து மக்களவைத் தேர்தலில் வாக்கு பெற திட்டமிட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில் அமைதியாக இருக்க முடியாது, மாநில மக்களுக்காக போராட ஒன்றிணைவோம். மக்களை நம்ப வைப்பது நமக்கு முன்னால் ஒரு சவால் உள்ளது. 

முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் மீண்டும் பாஜகவில் இணைந்தது கட்சிக்கு பெரிய ஊக்கத்தை அளித்துள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com